கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி ஊர் சுற்றி வரும் மர்ம ஸ்கூட்டர்! டெஸ்டிங்கே இவ்வளவு ரகசியமா இருக்குதே!
சுஸூகி நிறுவனம் தனது ஆக்செஸ் ஸ்கூட்டரை தற்போது அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு விதமான அப்டேட்களை நிறுவனம் ஸ்கூட்டரில் செய்து அதை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரிய வருவது என்ன? சுஸூகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் என்னென்ன அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று ஸ்கூட்டர் செக்மென்ட் என்று எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது. பல நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்களை தயார் செய்து அறிமுகப்படுத்தி சிறப்பாக விற்பனை செய்து வருகின்றனர். சுஸூகி நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாக வரும் ஸ்கூட்டராக ஆக்செஸ் என்ற ஸ்கூட்டர் தான் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் தற்போது மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது.

விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருப்பதற்காக சுஸூகி நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்து வெளியிட தயாராகி வருகிறது. வரும் 2025-ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட சுஸூகி அக்செஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அப்டேட் செய்யப்பட்ட ஸ்கூட்டரை நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது நமக்கு பல ஆச்சரியமான தகவல்கள் இருக்கிறது. பல்வேறு விதமான மாற்றங்களை செய்துள்ளதாக நமக்கு தெரிய வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக சோதனை செய்யப்படும் ஸ்கூட்டரை முழுமையாக மூடி சோதனை செய்து வருகிறது.

முழுமையாக மூடி சோதனை செய்ய வருவது என்றால் ஸ்கூட்டரின் ஹெட்லைட்டை கூட அந்நிறுவனம் மூடி உள்ளது என்றால் பார்த்துக்கெள்ளுங்களேன். அந்த அளவுக்கு பல்வேறு விதமான அப்டேட்களை இந்நிறுவனம் செய்வதால் அது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நமக்கு சில விஷயங்கள் தெளிவாக தெரிகிறது.
சுஸூகி நிறுவனம் இந்த அக்செஸ் ஸ்கூட்டரில் முன்பக்கமும் பின்பக்கமும் சென்டர்கள் பின்பக்க கேப்ரியல் பெரிய சீட் டிசைன் உள்ளிட்டவை எல்லாம் தற்போது உள்ள மாடலில் இருப்பது போலவே தான் வடிவமைத்துள்ளது. பின்பக்க மட்காடு மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்திற்கான ஹீட்சீல்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய ஃப்ளோர் போர்டு பகுதி புதிய அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், லக்கேஜ் ஹூக்குகள் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். மேலும் புதிய கலர் ஆப்ஷனில் அப்டேட் செய்யப்படும் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் ரூபாய் 82,300 முதல் 93 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த ஸ்கூட்டர் டிஸ்க், டிரம், ஸ்பெஷல் எடிசன், ரைடு கனெக்ட் ஆகிய வேரியண்டுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர்வில் 124cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.7பிஎச்பி பவரையும், 10என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நிச்சயம் அப்டேட்டாகும் போது இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 2025குளோபல் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் திருப்தியான அனுபவத்தை உணர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்படும் போது இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டர் செக்மெண்டில் இப்பொழுது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக அதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சுஸூகி ஸ்கூட்டர் அப்டேட் ஆகி இதற்கு போட்டியாக பல்வேறு அம்சங்கள் அப்டேட் ஆகி இருக்கும். இந்த ஸ்கூட்டர் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் பட்சத்தில் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









