பாக்கவே பக்காவா இருக்குதே! இந்த பைக்கின் விற்பனை சும்மா பிச்சுக்கப்போகுது!
டிவிஎஸ் நிறுவனம் கோவாவில் நடந்து வரும் மோட்டோசோல் கண்காட்சியில் தனது புதிய 2025 டிவிஎஸ் ரோனின் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அதிகம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக என்ன விஷயங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் தனது ரோனின் என்ற பைக்கை இந்திய மார்க்கெட்டில் நின்ற நாட்களாக விற்பனை செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. மக்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பைக்கை அப்டேட் செய்ய நிறுவனம் முடிவு செய்து தற்போது அப்டேட் செய்யப்பட்ட பைக்கை கோவாவில் நடந்து வரும் நிறுவனத்தின் மோட்டோசோல் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் ரோனின் பைக்கை பொறுத்தவரை இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலர் ஆப்ஷன்கள் ஏற்கனவே அந்த பைக் விற்பனையாகி வரும் இரண்டு கலர் ஆப்ஷன்களுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்கனவே டிவிஎஸ் ரோனின் பைக்கில் டெல்டா ப்ளூ மற்றும் ஸ்டார்கேஸ் பிளாக் ஆகிய நிறங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த நிறங்கள் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக புதிதாக கிளாசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பர் ஆகிய இரண்டு புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இதை பைக்கில் புதிதாக மிட் மற்று் டாப்வேறியாட்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பைக்கில் பேஸ் வேரியண்டில் மட்டுமே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்கிறது. மற்ற அனைத்து வேரியண்டிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்கிறது.

டிவிஎஸ் ரோனின் பைக்கில் புதிய கலர் ஆப்ஷன் மட்டுமல்லாமல் கிராபிக்ஸ் மற்றும் பங்க்ஷனாலிட்டி அப்டேட்டும் பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இல்லை. பழைய பைக்கில் இருந்து அதன் மெக்கானிக்கல் அம்சங்கள் தான் புதிய பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் ரோனின் பைக்கின் இன்ஜினை பொறுத்த வரை 225cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 பிஎஸ்பி பவரை அதிகபட்சமாக 7,750 ஆர்பிஎம்மிலும் 19.93 அதிகபட்சமாக 3750 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்லீப்பர் கிளட்ச் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

மற்றபடி பைக்கில் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எந்தவித பெரிய மாற்றங்களும் இல்லை. பழைய பைக் போலவே தான் இருக்கிறது. குறிப்பிட்ட சில அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக விரும்பியதால் இந்த அப்டேட்களை எல்லாம் செய்து 2025 டிவிஎஸ் ரோனின் பைக்காக இந்த பைக் வெளியிடப்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் விலையும் அப்பொழுதுதான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் இது ஒரு நல்ல தீர்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் பிரீமியம் வாகன பிரிவு பிசினஸ் தலைமை அதிகாரியான விமல் கூறும் போது: "இந்த டிவிஎஸ் மோட்டோசோல் நிகழ்ச்சி டிவிஎஸ் வாடிக்கையாளர்களிடையே புத்துணர்வையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தித் தருகிறது. ஒவ்வொரு பைக்கிலும் நாங்கள் மோட்டார் சைக்கிள் குறித்த ஒரு உத்வேகத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தர விரும்புகிறோம். அப்படித்தான் இந்த பைக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் ரோனின் பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படியாக புதிய அப்டேட்டை வாடிக்கையாளர்கள் மூலம் பெற்றுள்ளது நிச்சயம் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும். இதனால் இந்த பைக்கின் விற்பனை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக்கின் அறிமுகத்தின் போது தான் விலை தெரிய வரும் என்பதால் அதன் பிறகு தான் விற்பனை எப்படி இருக்கும் என கணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









