கொடுக்கும் பணத்திற்கு ரொம்ப வொர்த்து... ஸ்டைலிலும் எந்த குறையும் இல்ல!! டாப்-3 பைக்குகள்

உலகளவில் மிக பெரிய 2-வீலர் மார்க்கெட் என்றால், அது நம் இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போதும் 100சிசி பைக்குகள் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. அதேநேரம், பல இலட்சங்களில் விலை கொண்ட பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்களும் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. இந்தியாவில் சமீப காலத்தில் குறைவான விலையில் பல புதிய பைக்குகள் ஸ்டைலிஷான தோற்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டி, பைக்கை ஸ்டைலாக வடிவமைத்து, சிறிய என்ஜினை பொருத்தும் யுக்தியை கடந்த சில வருடங்களாக பைக் நிறுவனங்கள் கையில் மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்டைலிஷான பல்சர் பைக்குகளை புது, புது பெயர்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இதனை கண்ட மற்ற பைக் நிறுவனங்களும், இதே பாணியை பின்பற்றி சில பைக்குகளை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. அந்த வகையில், இந்தியாவில் விற்பனையில் உள்ள நன்கு மைலேஜ் தரக்கூடிய ஸ்டைலிஷான மூன்று 160சிசி பைக்குகளை பற்றி இனி பார்க்கலாம்.

3 best mileage 160cc bikes

பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160): ஏற்கனவே கூறியதுபோல், சமீப காலத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடர்ன் பல்சர் பைக், பல்சர் என்160 ஆகும். இதன் அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்சர் 250 பைக்குகளை பஜாஜ் அறிமுகம் செய்திருந்தது. முற்றிலும் புதுமையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட பல்சர் என்250 பைக்கின் டிசைனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அதே டிசைனில் சிறிய அளவிலான என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டதே என்160 ஆகும்.

இதன்படி, என்250 பைக்கை போன்று, என்160 பைக்கில் எக்ஸாஸ்ட் குழாய் ஆனது சிறிய அளவில் பைக்கிற்கு அடியில் வழங்கப்படுகிறது. ஆனால், என்160 பைக்கில் வழக்கமான டிடிஎஸ்-ஐ என்ஜினையே பஜாஜ் நிறுவனம் பொருத்தியுள்ளது. என்160 பைக்கில் 164.82சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. சோதனைகளின் முடிவில், இந்த பல்சர் பைக் லிட்டர் 50கிமீ-க்கும் அதிகமான மைலேஜை வழங்குகிறது.

3 best mileage 160cc bikes

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி (TVS Apache RTR160 4V): இப்போது எத்தனை மைலேஜ் பைக்குகள் வேண்டுமானாலும் ஸ்டைலான தோற்றத்தில் வெளிவரலாம். ஆனால் அதற்கு விதை போட்டது அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி ஆகும். டிவிஎஸ் மோட்டாரின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கான அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி அதன் அருமையான எக்ஸாஸ்ட் சத்தம் மூலமாக இளம் தலைமுறையினரை கவர்கிறது.

இதற்கு மத்தியில், சமீபத்தில் இந்த அப்பாச்சி பைக்கின் ஸ்டீல்த் எடிசன் முற்றிலும் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் 159.7சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 60kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் மைலேஜ் நெடுஞ்சாலையில் ஏறக்குறைய 50kmpl ஆகும்.

3 best mileage 160cc bikes

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Hero Xtreme160 4V): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில்தான் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை அப்டேட் செய்தது. இதன் மூலமாக, பைக்கின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டு இருப்பதுடன், பைக் ஆற்றல்மிக்கதாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் சிறந்த மைலேஜை வழங்கக்கூடிய 160சிசி பைக்குகளுள் ஒன்றாகவும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கை சொல்லலாம்.

இந்த பைக்கிலும் சரி, மேலே பார்த்த டிவிஎஸ் பைக்கிலும் சரி பெயரில் '4வி' என இருப்பதன் அர்த்தம் என்னவென்றால், இந்த பைக்குகளின் என்ஜின் சிஸ்டத்தில் 4 வால்வுகள் பொருத்தப்படுகின்றன. 163சிசி, 4-வால்வு, ஏர்-கூல்டு என்ஜினை பெறும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் மைலேஜ் ஏறக்குறைய 45kmpl ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 160சிசி பைக்குகள், பவர்ஃபுல்லான தரத்திற்கும், சிறந்த மைலேஜுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவை ஆகும். அதாவது, மேற்கண்ட 160சிசி பைக்குகளில் சிறந்த மைலேஜையும் பெறலாம், அதேநேரம் போதுமான அளவிற்கான பவர்ஃபுல்லான என்ஜினையும் பெறலாம். இதுபோதாது, இந்த பைக்குகள் பார்ப்பதற்கும் நன்கு ஸ்டைலிஷாக உருவாக்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, July 7, 2024, 13:00 [IST]
English summary
3 best mileage 160cc bikes in stylish design pulsar n160 apache rtr160 4v xtreme 160 4v
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X