இந்த தீபாவளிக்கு கரெக்ட்டான ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கஷ்டம் தான்!! வீட்டுக்கு ஒருத்தரை கொண்டு வாருங்கள்!
தீபாவளி (Diwali) பண்டிகை நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகளும், சுவையான இனிப்புகளும் தான் நம் ஞாபகத்திற்கு வரும். அதேபோல், தீபாவளி பண்டிகைக்காக அதிரடியான சலுகைகளும், தள்ளுபடிகளும் பல்வேறு விதமான பொருட்களுக்கு வழங்கப்படுவதை ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம். ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் சூப்பரான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏனெனில், தீபாவளி சமயத்தின்போதுதான் பலரும் தங்களது புதிய வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இதனால், வாகனங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், கஸ்டமர்களை அதிகரிக்க புதிய வாகனங்களும் மார்க்கெட்டில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 ஸ்கூட்டர்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த ஸ்கூட்டர்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன.

ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X): ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான இதில் 2kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 151கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ஓலா எலக்ட்ரிக் தெரிவிக்கிறது. ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். முற்றிலுமாக புகையை கக்காத இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் ஜி3.0 (Lectrix LXS G3.0): தினசரி போக்குவரத்துக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த இ-ஸ்கூட்டருக்கான பேட்டரியை ஒப்பந்தம் முறையில் பெற வேண்டியுள்ளது. பேட்டரிக்கு ஒரு மாத ஒப்பந்த தொகை ரூ.999 ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழு பேட்டரி சார்ஜில் அதிகப்பட்சமாக 115கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். பேட்டரியை 18 ஆம்பியர் சார்ஜர் கொண்டு வெறும் 3 மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம்.

டிவிஎஸ் ஜூபிட்டர் 125 (TVS Jupiter 125): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்று. இது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடையாது. இதில் 124.8சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 8.04 பிஎச்பி மற்றும் 10.5 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ் (Ampere Magnus EX): இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி வெளியே எடுக்க முடியும். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 80இல் இருந்து 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.85 ஆயிரமாக உள்ளது.

லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் ஜி2.0 (Lectrix LXS G2.0): இது ஒரு மாடர்னான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு நிறைய அதிநவீன வசதிகள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. ஸ்கூட்டருடன் உங்களது மொபைல் போனை இணைக்கும் வசதி இதில் அசத்தலான ஒன்றாகும். இதில் 2.3 கிலோவாட்ஸ் பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் 98கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளிக்கு வீட்டில் புதியதாக ஒருவரை குடும்ப உறுப்பினராக வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக உள்ளது. பல இலட்சங்கள் கொடுத்து கார்களை வாங்க முடியாவிடினும், குறைந்தப்பட்சம் இவ்வாறான ஸ்கூட்டர்களை வாங்கலாம். பசுமையான போக்குவரத்திற்கு தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
