2 லட்சம் தான் உங்களது பட்ஜெட்டா? இந்த 5 பைக்குகளுள் ஒன்றை எல்லாரிடமும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டு வாங்க பாருங்க!!

ஸ்டைலான தோற்றத்தில் புதிய பைக் வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். இப்போதெல்லாம் ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்தால்தான் பவர்ஃபுல்லான பைக் கிடைக்கும் என்கிற அளவிற்கு மார்க்கெட் மாறிவிட்டது. பைக் நிறுவனங்களும் விலை குறைவான பைக்குகளை தாண்டி, இவ்வாறான சற்று பிரீமியம் தரத்திலான பைக்குகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. ஏனெனில், இத்தகைய பைக்குகளை வாங்குவோரில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினராக இருப்பதால், அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பைக்கை உருவாக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு ரூ.2 லட்சத்திற்குள் ஸ்டைலான தோற்றத்தில் என்னென்ன பைக்குகள் கிடைக்கின்றன என்பதை அறிய விரும்புகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த செய்தியில் மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள 5 200சிசி மோட்டார்சைக்கிள்களை பார்க்க போகிறோம். 200சிசி பைக்குகள் தான் ஸ்டைலான தோற்றத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது போல் குறைவான விலையிலும் கிடைக்கின்றன. வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

stylist bikes under 2 lakhs

யமஹா எம்டி-15 வெர்சன் 2.0 (Yamaha MT-15 Ver 2.0): 200சிசி பைக்குகள் என குறிப்பிட்டுவிட்டு, 150சிசி பைக்கை காட்டுகிறீர்களே என கோபித்துக் கொள்ள வேண்டாம். அதனால்தான் இதனை முதலில் பார்க்கிறோம். 150சிசி பைக்காக இருப்பினும், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் மற்ற பைக்குகளுக்கு விலையில் இந்த யமாஹ பைக் இணையாக உள்ளது. எம்டி-15 வெர்சன் 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.68 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

stylist bikes under 2 lakhs

பஜாஜ் பல்சர் என்.எஸ்200 (Bajaj Pulsar NS200): தினசரி பயன்பாட்டிற்கான ஸ்போர்டியான தோற்றம் கொண்ட பைக்காக விளங்கும் என்.எஸ்200-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.54 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. என்.எஸ்200 பைக்கில் 199.5சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 24 எச்பி மற்றும் 18.74 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

stylist bikes under 2 lakhs

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி (TVS Apache RTR200 4V): நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் பிரபலமான அப்பாச்சி பைக். எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.48 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த பைக்கில் பொருத்தப்படும் 197.8சிசி, ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 20 எச்பி மற்றும் 17.25 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

stylist bikes under 2 lakhs

ஹோண்டா ஹார்னெட் 2.0 (Honda Hornet 2.0): இந்தியாவில் கொண்டாடப்படாத தரமான ஹோண்டா பைக் ஹார்னெட் 2.0 என சொல்லலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.40 லட்சமாக உள்ளது. இதில் பொருத்தப்படும் 184சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 17 எச்பி மற்றும் 15.9 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

stylist bikes under 2 lakhs

கேடிஎம் 200 ட்யூக் (KTM 200 Duke): இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் விலைமிக்க 200சிசி பைக். ரூ.1.98 லட்சம் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை. மிகவும் ஸ்டைலான பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்காக இதன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பொருத்தப்படுகின்ற 199.5சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 24 எச்பி மற்றும் 19.3 என்.எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடைசியாக பார்த்த கேடிஎம் பைக்கை தவிர்த்து மற்றவை அனைத்தையும் ரூ.2 லட்சத்திற்குள் வாங்க முடியும். இவை அனைத்தும் தோற்றத்தில் ஸ்டைலானவைகளாக உள்ளதால், இவற்றுள் ஒன்றை வாங்குவது இளம் தலைமுறையினருக்கு ஏற்றதாக இருக்கும். அதேநேரம், கொஞ்சம் பவர்ஃபுல்லான பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கும் இவை சரியானவையாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 20:16 [IST]
English summary
5 best stylist bikes in india under price 2 lakhs check all details here
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X