லட்ச ரூபாய்களை கையில் வெச்சிக்கிட்டு எந்த பைக்கை வாங்குவது என தெரியலயா? இதில் ஒன்றை வாங்கினால் தனியா தெரிவீங்க

உலகளவில் மிக பெரிய 2-வீலர் சந்தை நம் இந்தியா என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், உலகில் வேறெந்த நாட்டிலும் விற்பனையாகாத எண்ணிக்கையில் 2-வீலர்கள் நம் நாட்டில் விற்பனையாகுகின்றன. குறிப்பாக, ஸ்கூட்டர்களுக்கு வெளிநாடுகள் மாறிவரும் சூழலில் இந்தியாவில் இன்னமும் பைக்குகளை அதிகம் பேர் வாங்குகின்றனர். குறிப்பாக, விலை குறைவான ஆற்றல் குறைந்த பைக்குகளுக்கு நம் இந்தியா மிக பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது. இதன் காரணமாகவே, முன்னணி 2-வீலர் நிறுவனங்கள் அனைத்தும் முடிந்தவரையில் குறைந்த விலையிலான பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய முயற்சிக்கின்றன.

இருப்பினும் அதேநேரம், ஆற்றல்மிக்க பைக்குகளை வாங்குவோரும் நம் நாட்டில் இல்லாமல் இல்லை. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விலை குறைவான பைக்குகளை போல் ஆற்றல்மிக்க விலையுயர்ந்த பைக்குகளின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய கால இந்திய இளம் தலைமுறையினர் வேகமாக செல்லக்கூடிய பைக்குகளை வாங்கவே விரும்புகின்றனர்.

5 best 2-cylinder engine bikes

பெரும்பான்மையான மக்கள் வாங்கும் பைக்குகளில் பெரும்பாலும் ஒரேயொரு சிலிண்டரை கொண்ட என்ஜின் தான் வழங்கப்படுவது வழக்கம். கொஞ்சம் ஆற்றல்மிக்க பைக் என்றால் மட்டுமே என்ஜின் சிஸ்டத்தில் இரு சிலிண்டர்களை வழங்குவார்கள். 500சிசி-ஐ தாண்டினால் நிச்சயமாக 2-சிலிண்டர் என்ஜினை பைக்கில் பொருத்துவார்கள். அவ்வாறு, 2-சிலிண்டர் என்ஜின் உடன் விற்பனையில் உள்ள சிறந்த 5 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 (Royal Enfield Interceptor 650): இந்தியாவில் குறைந்த விலையில் 2-சிலிண்டர் என்ஜின் உடன் கிடைக்கும் பைக். இந்தியாவில் 500சிசி-க்கு மேல் மக்கள் அதிக பேர் வாங்கும் பைக் இது. 648சிசி 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. ரெட்ரோ லுக் பைக்கான இது மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

5 best 2-cylinder engine bikes

ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 (Royal Enfield Continental GT): இண்டர்செப்டர் 650 பைக்கின் அதே 648சிசி 2-சிலிண்டர் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் மற்றொரு 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக். இண்டர்செப்டரை காட்டிலும் ஸ்டைலிஷானது. அதற்கேற்ப இந்த பைக்கின் விலையும் சற்று அதிகம்.

கவாஸாகி நிஞ்சா 300 (Kawasaki Ninja 300): 2-சிலிண்டர் என்ஜின்கள் என்றால், 500சிசி-க்கு மேற்பட்ட பைக்குகளுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும் என்கிற கருத்தை மாற்றி கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த பைக் நிஞ்சா 300 ஆகும். 2-சிலிண்டர் என்ஜினை கொண்டிருப்பதால், 300சிசி பைக்காக இருப்பினும் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.

5 best 2-cylinder engine bikes

பி.எம்.டபிள்யூ எஃப்850 ஜி.எஸ் (BMW F850 GS): பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்டைல் பைக். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.95 லட்சம். ஸ்டாண்டர்ட் & அட்வென்ச்சர் என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. 853சிசி, லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினை பெறுகிறது.

பெனெல்லி டி.ஆர்.கே 502எக்ஸ் (Benelli TRK 502K): பிரபலமான பெனெல்லி டி.ஆர்.கே 502 பைக்கின் ஆஃப்-ரோடு வெர்சனாக டி.ஆர்.கே 502எக்ஸ் விளங்குகிறது. அதாவது, கரடு முரடான சாலைகளுக்கும் கொண்டு செல்வதற்கு இந்த பைக் ஏற்றதாகும். இந்த பைக்கில் 500சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2-சிலிண்டர் என்ஜின் பைக்குகளில் சிறந்த பிக்-அப்பை வழங்கக்கூடிய டார்க் திறன் மிக அதிகமாக கிடைக்கிறது. இதன் காரணமாகவே, இத்தகைய பைக்குகளை நிறைய பேர் வாங்குகின்றனர். இந்த ஐந்து 2-சிலிண்டர் என்ஜின் பைக்குகளில் உங்களது மனம் கவர்ந்தது எது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 8:00 [IST]
English summary
5 best two cylinder engine bikes in india check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X