பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறிப்பிட்ட விகிதத்தில் அதிகரித்து வருவதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்க நிறைய பேர் விரும்புகின்றனர். இருப்பினும், எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க நம்மில் பெரும்பாலானோர் இன்னும் தயாராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் சில எலக்ட்ரிக் பைக்குகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அல்ட்ராவொய்லெட் எஃப்77 (Ultraviolette F77): 10.5kWh பேட்டரி மற்றும் 27 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரை கொண்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் இதுவாகும். பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம் வடிவமைத்துள்ள எஃப்77 பைக் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கும் செல்லவுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்படும் பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 307கிமீ தொலைவிற்கு செல்லலாம் என அல்ட்ராவொய்லெட் தெரிவிக்கிறது.

5 indian electric bikes

இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் டாப்-ஸ்பீடு 147kmph ஆகும். கிளைட், காம்பட் மற்றும் பாலிஸ்டிக் என 3 விதமான ரைடிங் மோட்களை கொண்ட எஃப்77 எலக்ட்ரிக் பைக்கில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இந்த செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக்கில் 36.2 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400): எலக்ட்ரிக் பைக்கை வாங்க நினைக்கும் கஸ்டமர்களின் முதல் சாய்ஸாக இருப்பது இந்த எலக்ட்ரிக் பைக் ஆகும். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு நீண்ட கால உத்தரவாதத்தை ரிவோல்ட் நிறுவனம் வழங்குகிறது.

5 indian electric bikes

ஸ்பிளெண்டர் பைக்குகளை போன்று தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்கான ஆர்வி400 -இல் 3.24kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த விலை குறைவான எலக்ட்ரிக் பைக்கில் 4.02 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது. ஸ்மூத்தான பயணத்திற்கு ரிவோல்ட் ஆர்வி400 ஏற்றதாக உள்ளது.

5 indian electric bikes

மேட்டர் ஏரா 5000 (Matter Aera 5000): ஸ்போர்டியான தோற்றத்திலான எலக்ட்ரிக் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் பைக்கான இதில் 10 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இதனுடன், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதாவது, கியர்களை கொண்ட எலக்ட்ரிக் பைக் மேட்டர் ஏரா 5000 ஆகும்.

5 indian electric bikes

டார்க் க்ராடோஸ் ஆர் (Tork Kratos R): ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற சில தனித்துவமான அம்சங்களை கொண்ட எலக்ட்ரிக் பைக் இதுவாகும். இந்த பைக்கில் பல்வேறு ரைட் மோட்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்படுகின்ற 4 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் செல்லலாம்.

5 indian electric bikes

ஒபென் ரோர் (Oben Rorr): ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் என இரண்டும் கலந்த தோற்றத்தில் காட்சித்தரும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் 4.4kWh பேட்டரி மற்றும் 10 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கில் எல்இடி விளக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் இன்னமும் பைக்குகளை எலக்ட்ரிக்கில் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இந்த நிலை வரும் ஆண்டுகளில் நிச்சயமாக மாறும். இந்த நிலை மாற வேண்டுமெனில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா போன்ற முன்னணி பைக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 எலக்ட்ரிக் பைக்குகளில் எது உங்களது மனதை கவர்ந்தது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 14, 2024, 13:58 [IST]
English summary
5 electric bikes which selling in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X