ரூ.5 லட்சத்தை வெச்சிக்கிட்டு பவர்ஃபுல்லான பைக்கை வாங்க தெரியாமல் முழிக்கிறீங்களா? இதில் ஒன்றை வாங்க பாருங்க!!

உலகில் அதிக எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகும் நாடுகளில் நமது இந்தியா முதன்மையானது. நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கேற்ப 100சிசி-இல் இருந்து 1500சிசி வரையில் பல்வேறு விதமான விலைகளில் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ப நன்கு மைலேஜ் தரக்கூடிய விலை குறைவான பைக்குகளில் இருந்து செல்வந்தர்களால் மட்டுமே வாங்க முடிந்த ஆற்றல்மிக்க பைக்குகள் வரையில் நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ளன. அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் 2-வீலர்களும் இங்கு ஏராளமானவை விற்பனையில் உள்ளன.

ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது ரூ.5 லட்சத்திற்குள் விலைக் கொண்ட மிகவும் பவர்ஃபுல்லான 5 மோட்டார்சைக்கிளை பற்றி ஆகும். இந்த தொகுப்பில் பார்க்க போகும் பைக்குகள் அனைத்திலும் குறைந்தப்பட்சம் 40 எச்பி இயக்க ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக, ஒரு பைக்கில் 47.6 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். வாருங்கள், அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

5 powerful bikes in india

5. யமஹா எம்டி-03 & ஆர்3 (Yamaha MT-03 & R3): யமஹா எம்டி மற்றும் ஆர் பைக்குகளுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அவற்றில் 321சிசி ட்வின்-சிலிண்டர் என்ஜினை கொண்ட எம்டி-03 மற்றும் ஆர்3 பைக்குகளை இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்குள் வாங்கலாம். இந்த பைக்குகளில் அதிகப்பட்சமாக 42 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

4. கேடிஎம் ஆர்சி390 & 390 அட்வென்ச்சர் (KTM RC390 & 390 Adventure): இந்த கேடிஎம் பைக்குகளில் 43.5 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இவை இரண்டிலும் 373சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதில் ஆர்சி390 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.20 லட்சத்தில் இருந்தும், 390 அட்வென்ச்சர் பைக்கின் விலைகள் ரூ.2.83 லட்சத்தில் இருந்தும் ஆரம்பிக்கின்றன.

5 powerful bikes in india

3. 3வது ஜென்ரேஷன் கேடிஎம் 390 ட்யூக் (Gen-3 KTM 390 Duke): மேற்கூறப்பட்ட கேடிஎம் ஆர்சி390 & 390 அட்வென்ச்சர் பைக்குகளை காட்டிலும் ஆற்றல்மிக்க 399சிசி என்ஜினை பெறும் பைக் இதுவாகும். கூடிய விரைவில் இந்த என்ஜின் ஆர்சி & அட்வென்ச்சர் வெர்சன் பைக்குகளுக்கும் கொடுக்கும். 3வது ஜென்ரேஷன் கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.12 லட்சமாக உள்ளது.

2. ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 & பெனெல்லி லியோன்சினோ 500 (Royal Enfield Interceptor 650 & Benelli Leoncino 500): இவை இரண்டையும் வெவ்வேறு விதமான நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன மற்றும் வெவ்வேறு விதமான என்ஜின்கள் இவற்றில் பொருத்தப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் என்ஜின்கள் ஒரே மாதிரியாக 47.5 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. ஆனால், இண்டர்செப்டரில் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜினும், லியோன்சினோவில் லிக்யுடு-கூல்டு என்ஜினும் பொருத்தப்படுகிறது.

5 powerful bikes in india

1. ஏப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS457): இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய பவர்ஃபுல்லான பைக் இதுவாகும். மேலே கண்ட ராயல் என்ஃபீல்டு & பெனெல்லி பைக்குகளுடன் ஒப்பிடுகையில், வெறும் 0.1 எச்பி என்ஜின் ஆற்றல் இந்த ஏப்ரிலியா பைக்கில் அதிகமாக கிடைக்கிறது. அதாவது, 47.6 எச்பி. அலுமினியத்திலான ட்வின் ஸ்பார் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இந்த பைக் ஏப்ரிலியாவின் விலையுயர்ந்த பைக்குகள் போன்று கவர்ச்சிக்கரமான தோற்றத்தை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 0.1 எச்பி என்பது பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. பைக்கை ஓட்டும்போது இந்த வித்தியாசத்தை உங்களால் உணரவே முடியாது. ஆதலால், இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய ஆற்றல்மிக்க பைக்காக ஏப்ரிலியா ஆர்.எஸ்457, ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 மற்றும் பெனெல்லி லியோன்சினோ 500 பைக்குகளை சொல்லலாம். இவற்றில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 21:12 [IST]
English summary
5 powerful bikes in india under rupees 5 lakhs check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X