எல்லாரும் ராயல் என்ஃபீல்டை தேடி ஓடி வருவதற்கு காரணம் என்னவா இருக்கும்? கவாஸாகி ரொம்ப போராடுது!!

இந்தியாவில் விலை குறைவான பைக்குகளுக்கே பெரிய மார்க்கெட் உள்ளது என்பதை பற்றி கூற வேண்டியது இல்லை. இதற்கு சாட்சியாக ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதேநேரம், விலையுயர்ந்த பைக்குகளும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றுள் 500சிசி-க்கு மேல் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் எத்தனை மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம். 500சிசி-க்கு மேல் ஆற்றல் கொண்ட என்ஜின் உடன் நம் நாட்டு சந்தையில் மொத்தம் 37 பைக்குகள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன.

500cc motorcycle sales increased

ஆனால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் அவற்றுள் கிட்டத்தட்ட 13 பைக்குகள் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. அதிகப்பட்சமாக, வழக்கம்போல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் பைக்குகளின் எண்ணிக்கை 2,070 ஆகும்.

ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 1,170 650 ட்வின் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 900 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டின் 650 ட்வின் பைக்குகளாக இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

500cc motorcycle sales increased

இதற்கடுத்து 2வது இடத்தையும் மற்றொரு ராயல் என்ஃபீல்டு பைக்கான சூப்பர் மீட்டியோர் 650 பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்குகளின் எண்ணிக்கை 1,073 ஆகும். ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் ஒரு சூப்பர் மீட்டியோர் 650 பைக் கூட விற்பனை செய்யப்படவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில்தான், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

மீட்டியோர் 350 பைக்கின் அதே க்ரூஸர் தோற்றத்தில், கொஞ்சம் அளவில் பெரியதாக சூப்பர் மீட்டியோர் 650 பைக் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமே 500சிசி-க்கு மேல் பைக் வாங்க விரும்பும் பெரும்பாலானோரின் சாய்ஸாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், 500சிசி-க்கு மேல் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 3,497 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 3,143 பைக்குகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஆகும்.

500cc motorcycle sales increased

மீதி 354 பைக்குகள் மட்டுமே வேறு பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டன. அவற்றுள் அதிகப்பட்சமாக கவாஸாகி இசட்900 82 பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தவிர்த்து வேறெந்த 500சிசி பைக்கும் கடந்த மாதத்தில் 100 யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை.

இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள கவாஸாகி இசட்900 கடந்த மாதத்தில் 82 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 57 இசட்900 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் 4வது மற்றும் 5வது இடங்களில் கவாஸாகி இசட்.எக்ஸ்-6ஆர் மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்குகள் முறையே 79 மற்றும் 29 என்கிற விற்பனை எண்ணிக்கைகள் உடன் உள்ளன.

500cc motorcycle sales increased

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 500சிசி-க்கு மேல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதிக பைக்குகளை விற்பனை செய்வதற்கு முக்கிய காரணம், அவற்றின் குறைவான விலைகள் ஆகும். அதுமட்டுமின்றி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெரிய சேல்ஸ் நெட்வொர்க்கை நாடு முழுவதும் கொண்டுள்ளது. ஆதலால், வழக்கமான பைக்குகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பைக்கை வாங்க நினைப்பவர்களே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து வேறுப்பட்ட மோட்டார்சைக்கிள் பிராண்டின் பக்கம் செல்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 20:21 [IST]
English summary
500cc plus motorcycle sales increased to 142 percent in 2024 february
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X