பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!

கேடிஎம் பைக்குகள் மீது எப்போதுமே நம் இளம் தலைமுறையினருக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. 2012இல் முதன்முதலாக ட்யூக் 200 பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணியில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கேடிஎம் பைக்குகள் அனைத்தும் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கேடிஎம் பைக்குகளின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் அதிகப்படியான விலை ஆகும். வெறும் 125சிசி கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை கூட ரூ.1.79 லட்சமாக உள்ளது. இந்த விலையில் கிடைக்கக்கூடிய மற்ற ஆற்றல்மிக்க பைக்குகளை பற்றி இனி பார்க்கலாம்.

6 bikes in ktm price

பஜாஜ் பல்சர் என்.எஸ்200 (Bajaj Pulsar NS200): விற்பனையில் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்கும் மாடல் பல்சர் என்.எஸ்200 ஆகும். ட்யூக் 125 பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் அதே தொழிற்சாலையில் தான் இந்த பல்சர் பைக்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில பாகங்களை இந்த இரு பைக்குகளும் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் என்.எஸ்200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது சற்று குறைவாக ரூ.1.57 லட்சமாக உள்ளது.

yamaha mt15

யமஹா எம்டி-15 (Yamaha MT15): ட்யூக் 125 பைக்கை போல் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் யமஹா எம்டி15 ஆகும். ஆனால் ட்யூக் 125 பைக்கை விட ஆற்றல்மிக்க 155சிசி என்ஜின் எம்டி15 பைக்கில் பொருத்தப்பட்டாலும், இந்த யமஹா பைக் அளவில் சற்று சிறியதாக உள்ளது. எம்டி15 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.67 லட்சமாக உள்ளது.

royal enfield hunter 350

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350): இந்தியாவில் சமீப காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் ராயல் என்ஃபீல்டு பைக் இதுவாகும். ரூ.1.50 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ள இந்த பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஜே-சீரிஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

tvs ronin

டிவிஎஸ் ரோனின் (TVS Ronin): 2022இல் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டிவிஎஸ் பைக். இருப்பதிலேயே பவர்ஃபுல்லான டிவிஎஸ் பைக் என்று கூட சொல்லலாம். இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் ரூ.1.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 225சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 19.93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

royal enfield bullet 350

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350): இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் உள்ள பிரபலமான ரெட்ரோ-ஸ்டைல் ராயல் என்ஃபீல்டு பைக் இதுவாகும். ரூ.1.73 லட்சத்தில் இருந்து இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் துவங்குகின்றன. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 349சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

honda cb300f

ஹோண்டா சிபி300எஃப் (Honda CB300F): இதுவும் 2022இல் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஹோண்டா பைக் தான். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இதன் விற்பனை இல்லை என்பதுதான் உண்மை. இருப்பினும், இந்த பைக்கில் ஆற்றல்மிக்க 293சிசி என்ஜின் பொருத்தப்படுவதை மறுக்க முடியாது. இந்த 300சிசி ஹோண்டா பைக்கில் 293சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

ktm 125 duke

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை பைக்குகள் விற்பனையில் இருந்தாலும், கேடிஎம் பைக் என்பது ஒரு அடையாளமே ஆகும். கேடிஎம் பைக்கை வைத்திருந்தால் ஏரியாவில் நீங்கள் மட்டும் தனியாக தெரிவீர்கள். இருப்பினும், ட்யூக் 125 பைக்கை வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ட்யூக் 200 பைக்கை வாங்க பாருங்கள். ஏனெனில், இரண்டிற்கும் இடையே விலையில் ரூ.20,000 - 30,000 என்ற அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 11:50 [IST]
English summary
6 powerful bikes in ktm 125 duke price in india check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X