ஹீரோவை முந்த போராடும் ஹோண்டா!! ஒன்றாக ஹீரோ-ஹோண்டாவாக இருந்த போது எப்படி இருந்துச்சு!!
உலகின் மிக பெரிய 2-வீலர் வாகன சந்தையான நமது இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் முதல் 6 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வழக்கம்போல், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5 லட்சத்து 13,296 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் 3 லட்சத்து 86,184 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப்பின் உள்நாட்டு 2-வீலர்கள் விற்பனை 32.91%, அதாவது 1 லட்சத்து 27,112 வாகனங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் 4 லட்சத்து 59,257 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. ஆனால், இதனை காட்டிலும் இதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் 54,039 ஹீரோ 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவை இல்லாமல், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 20,289 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2023 ஏப்ரலில் வெறும் 9,923 ஹீரோ 2-வீலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு அடுத்து, 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது.

ஹோண்டாவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 81,046 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரலில் 3 லட்சத்து 38,289 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்தியாவில் ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 42,757 வாகனங்கள் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியும் 2023 ஏப்ரலை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரலில் இந்தியாவில் இருந்து 36,458 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்த ஹோண்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 60,900 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதற்கடுத்து 3வது இடத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனதாக்கி உள்ளது. டிவிஎஸ் மோட்டாரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 1,449 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 32,956 இருசக்கர வாகனங்கள் மட்டுமே டிவிஎஸ் மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில், டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை ஆனது 35,122 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவில் இருந்து கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 16,950 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 88,067 மற்றும் 75,038 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பினும், உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து பார்த்தால், ஹீரோ மோட்டோகார்பை காட்டிலும் ஹோண்டா அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது. அதேபோல், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் 2-வீலர் ஏற்றுமதிகளும் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications









