ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!

இந்தியாவில் எப்போதுமே விலை குறைவான பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இருப்பினும், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட பைக்குகளை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் உள்ளனர். ஏனெனில் அந்த அளவிற்கு பலத்தரப்பட்ட மக்களை கொண்டது நம் இந்தியா ஆகும்.

இதன் காரணமாகவே, ஒரு பக்கம் ஹீரோ ஸ்பிளெண்டர் போன்ற விலை குறைவான பைக்குகள் விற்பனையாகி கொண்டிருக்க, மறுபக்கம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகளும் நம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.30 லட்சம் அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

powerful bikes under rs 5 lakhs

7. டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400): டிரையம்ப்பின் எடை குறைவான மாடர்ன் பைக். இந்திய மார்க்கெட்டில் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.33 லட்சம் ஆகும். இந்தியாவில் இந்த டிரையம்ப் பைக் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 398சிசி, லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 39 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

powerful bikes under rs 5 lakhs

6. அல்ட்ராவொய்லெட் எஃப்77 (Ultraviolette F77): இந்தியாவின் முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக். பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல அல்ட்ராவொய்லெட் தயாராகி வருகிறது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.80 லட்சமாக தற்சமயம் உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 40 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

powerful bikes under rs 5 lakhs

5. யமஹா ஆர்3 (Yamaha R3): உலகளவில் பிரபலமான யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்குகளுள் ஒன்று. இந்திய சந்தையில் ரூ.4.65 லட்சத்தை எக்ஸ்-ஷோரூம் விலையாக கொண்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 321சிசி, 2-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 41 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

powerful bikes under rs 5 lakhs

4. கேடிஎம் ஆர்சி390 (KTM RC390): சமீப காலத்தில் இந்தியாவில் வரவேற்பை பெற்றுவரும் கேடிஎம் பைக் இதுவாகும். ரூ.3.18 லட்சத்தில் இருந்து இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்தியாவில் துவங்குகின்றன. இந்த ஆர்சி பைக்கில் பொருத்தப்படும் 373சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது 42 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

powerful bikes under rs 5 lakhs

3. கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke): மேலே கண்ட ஆர்சி பைக்கின் நாக்டு வெர்சன் இதுவாகும். இந்தியாவில் விலையுயர்ந்த கேடிஎம் ட்யூக் பைக். ஆர்சி390 பைக்கை விட வெறும் ரூ.8 ஆயிரம் குறைவாக ரூ.3.10 லட்சத்தை எக்ஸ்-ஷோரூம் விலையாக கொண்டுள்ளது. இந்த பைக்கின் 399சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் 45 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.

powerful bikes under rs 5 lakhs

2. ஏப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS457): உலகளவில் பிரபலமான இத்தாலியன்-ஸ்டைல் பைக். ஏப்ரிலியா நிறுவனத்தின் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை கொண்ட மோட்டார்சைக்கிள். இந்தியாவில் ரூ.4.1 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது. பெயருக்கேற்ப இந்த ஏப்ரிலியா பைக்கில் 457சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 47 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

powerful bikes under rs 5 lakhs

1. ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 (Royal Enfield Continental GT650): ராயல் என்ஃபீல்டின் கேஃப் ரேஸர் டிசைனிலான பைக். இந்தியாவில் விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் இதுவும் ஒன்று. ரூ.3.19 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையை காண்டினெண்டல் ஜிடி650 கொண்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படுகின்ற 648சிசி இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3 லட்சம் - 4 லட்சத்திற்குள் இருந்தாலும், ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.5 லட்சத்திற்கு அருகே வந்துவிடும். இவை இல்லாமல், இன்னும் மேலும் சில பைக்குகளும் ரூ.5 லட்சம் என்கிற விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் டாப்-7 இடங்களை பிடிப்பவை இந்த மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 23:58 [IST]
English summary
7 most powerful engine bikes under rupees 5 lakhs in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X