அஜித்தோட டேஸ்ட் என்னனு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க! ஷாலினி கொடுத்த பரிச பார்த்து அஜித்தே மிரண்டு போயிட்டாரு!
நடிகர் அஜித்திற்கு மனைவி ஷாலினி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பைக்? அதன் விலை எவ்வளவு? மற்றும் பைக்கின் சிறப்புகள் என்ன? என்பது போன்ற சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், சமீபத்தில் அவருடைய 53 மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நாளை முன்னிட்டு நடிகர் அஜித்திற்கு விலை உயர்ந்த பைக் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 (Ducati Multistrada V4) பைக்கே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் அட்வென்சர் டூரர் வகை மோட்டார்சைக்கிள் (Adventure Tourer Motorcycle) ஆகும். மனைவி ஷாலினியே இந்த பைக்கை அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இரண்டு சக்கர வாகனங்களில் அட்வென்சர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ளும் நபராக நடிகர் அஜித் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
சமீபத்தில் அவர் டூ-வீலரிலேயே உலகத்தின் பல பகுதிகளை வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, அவருக்கு நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற பைக் மாடலான டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 பைக் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இனி வரும் நாட்களில் அஜித்தின் பயணங்கள் இந்த பைக்கிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக பெரிய வாகன ஆர்வலர் மற்றும் டிராவலர் ஆவார் அஜித். இவரின் டேஸ்ட்டை அறிந்தே ஷாலினி இந்த பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றார். டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 இந்தியாவில் ரூ. 21.48 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி2 (V2), வி2எஸ் (V2S), வி4 (V4) மற்றும் வி4 எஸ் (V4S) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எவ்வளவு தூரம் பயணித்தாலும் அலுப்பே தெரியாமல் இருக்கும் வகையில் இந்த பைக்கை டுகாட்டி வடிவமைத்திருக்கின்றது. அதேவேளையில், ஒவ்வொரு முறையும் ரைடு மேற்கொள்ளும்போதும் அதிக உற்சாகமான பயண அனுபவம் கிடைக்கும்.
இத்தகைய பைக்காகவே டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் தனித்துவமான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. டிராவல் (Travel), என்டூரோ (Enduro), ஸ்போர்ட் (Sport) மற்றும் அர்பன் (Urban) ஆகியவையே அவை ஆகும்.
இத்துடன் ரைடு அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் நோக்கில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் 170 பிஎஸ் மற்றும் 125 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

1,158 சிசி திறன் கொண்ட வி4 மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை டுகாட்டி மல்டிஸ்ட்ரடா வி4 தனக்குள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, நீண்ட தூர பயணங்களின் போது அதிக லக்கேஜை ஏற்றிச் செல்வதற்கான வசதி வாய்ப்புகளையும் இந்த பைக் தனக்குள் தாங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்திடம் இன்னும் பல பைக் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, இதேபோல் அட்வென்சர் பயணத்தை மேற்கொள்வதற்கு உகந்த டூ-வீலர்களே அவரிடத்தில் அதிகம் உள்ளன. பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் போன்ற பைக்கையும் நடிகர் அஜித் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவரிடன் டேஸ்ட்டை உணர்ந்து ஷாலின் டுகாட்டி அட்வென்சர் பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








