ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
பஜாஜ் நிறுவனம் குறைந்த விலையில் தனது சேர்த்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் தற்போது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஓலா நிறுவனம் போன்ற மக்கள் நம்பிக்கையை பெற்ற பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் பஜாஜ் நிறுவனமும் சேத்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் குறைந்த விலையில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராகேஷ் ஷர்மா கூறியிருந்தார். தற்போது பஜாஜ் நிறுவனம் சேர்த்தக் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனை செய்து வருகிறது. அதன்படி அர்பன் என்ற வேரியன்ட் ரூபாய் 1.23லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும், பிரீமியம் என்ற வேரியன்ட் ரூபாய் 1.43 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் சிறப்பாக வாகனங்களை விற்பனை செய்து வரும் ஏத்தர், ஓலா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் ஸ்கூட்டர்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தயாரிப்புகளை எல்லாம் அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். அந்த வரிசையில் பஜாஜ் நிறுவனமும் இப்படியாக குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதற்காக பஜாஜ் நிறுவனம் ஹப் மோட்டாரை இந்த ஸ்கூட்டரில் பொருத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறைந்த விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சில கருவிகளை குறைத்து, சில அம்சங்களை நீக்கியும் இந்த வாகனத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக பிரேக்குகள் எல்லாம் டிரம் பிரேக்குகளாகவும், எல்சிடி ஸ்கிரீன்கள் கருப்பு வெள்ளை நிற ஸ்கிரீனாகவும் கனெக்டிவிட்டி அம்சங்கள் இல்லாமல் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பஜாஜ் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கான பேட்டரியை பொறுத்தவரை குறைந்த பவர் கொண்ட பேட்டரியை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை தற்போது பஜாஜ் நிறுவனம் பல இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. அதை பார்க்கும்போது டிசைனில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அம்சங்கள் மற்றும் அதன் உட்பாகங்களை மட்டும் மாற்றி விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் குறைந்த விலை வேரியன்ட் மே மாதமே விற்பனைக்கு அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏத்தர் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனததை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. அதைவிட குறைந்த விலையில் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக பஜாஜ் நிறுவனமும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப் போகிறது.
ஓலா நிறுவனம் ரூபாய் 69,999 என்ற ஆரம்ப விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், பஜாஜ் நிறுவனம் அதைவிட குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வந்தால் நிச்சயம் ஓலாவை விட அதிக விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரூபாய் 50,000 என்ற விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு இருக்கிறது.
பஜாஜ் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி தான் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டிற்குள் வந்தது. தற்போது நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனம் 1,06,431 சேர்த்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது. மார்க்கெட்டில் உள்ள 14 சதவீத பங்கை இந்நிறுவனம் வைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 164 நகரங்களில் 200 ஷோரூம்களை அமைத்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது மவுசு அதிகமாகி வரும் நிலையில், பல வாகன தயாரிப்பு நிறுவனங்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நோக்கி தங்கள் புதிய தயாரிப்புகளை திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி பஜாஜ் நிறுவனம் அடுத்த சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









