தினமும் யூஸ் பண்றதுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! ஒருமுறை சார்ஜ் பண்ணா போதும், 2 நாளைக்கு அசால்ட்டா ஓட்டலாம்

அமோ மொபைலிட்டி (Amo Mobility) நிறுவனம் அதன் புதிய ஜாண்டி ஐ புரோ (Jaunty i Pro) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, பேட்டரி மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில், இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அமோ மொபைலிட்டி அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

januty i pro electric scooter

ஜாண்டி இ புரோ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது ஓர் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த ஸ்கூட்டருக்கு விடா வி1 பிளஸ், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்குகின்றன. மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஜாண்டி ஐ புரோ இ-ஸ்கூட்டரை வாங்கலாம்.

நீலம், வெள்ளை மற்றும் கிரே என்பன அந்த 3 பெயிண்ட் கலர் ஆப்ஷன்கள் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 2.52 kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரில் உள்ள ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் ஸ்கூட்டரின் பேட்டரியை 3.5 மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 151 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்லலாம். எக்கனாமி, சிட்டி ரைட் மற்றும் பவர் என மொத்த 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள BLDC ஹப் மோட்டார் அதிகப்பட்சமாக 3.95 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், 143 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நாம் ஒரு சக்கரத்துக்கு பிரேக் கொடுத்தால், மற்றொரு சக்கரத்தின் பிரேக் சிஸ்டமும் தானாகவே இயங்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி வெடிப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதினால், பேட்டரியின் வெப்பநிலையை கண்காணித்து வெப்பநிலை உயரும் பட்சத்தில் அதுகுறித்த எச்சரிக்கை டிரைவருக்கு தெரிவிக்கப்படும்.

januty i pro electric scooter

அமோ மொபைலிட்டி நிறுவனத்துக்கு இந்தியாவில் மொத்தம் 200க்கும் அதிகமான டீலர்ஷிப் நெட்வொர்க் மையங்கள் உள்ளன. அமோ மொபைலிட்டியின் பிராண்ட் பார்ட்னராக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய 2024-25ஆம் நிதியாண்டில் குறைந்தது 30,000 ஜாண்டி ஐ புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்க அமோ மொபைலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய ஜாண்டி ஐ புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து அமோ மொபைலிட்டியின் நிறுவனர் சுஷாந்த் குமார் கருத்து தெரிவிக்கையில், "தொழிற்நுட்பத்தில் புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பை எங்களின் சமீபத்திய ஜாண்டி ஐ புரோ இவி காட்டுகிறது. வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பி.எம்.எஸ் ஆனது சந்தையின் தேவையை காட்டுகின்றன. 2.52 kWh பேட்டரி திறன் மற்றும் ஈர்க்கக்கூடிய மைலேஜ் மூலம் ஜாண்டி ஐ புரோ மாடர்ன் ரைடர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் காரணமாகவே, அமோ மொபைலிட்டி போன்ற நிறுவனங்கள் புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அமோ ஜாண்டி ஐ புரோ எந்த அளவிற்கு கஸ்டமர்களை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 19:09 [IST]
English summary
Amo mobility introduced jaunty i pro electric scooter price battery all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+