ஓலாக்கு இனி இங்க வேலை இல்ல.. ரொம்ப நாளா எதிர்பார்த்த இ-ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கிருச்சு.. இதோட விலை இவ்ளோதானா

இந்தியர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக இடம் பிடித்து வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களில் ஒன்றாக ஆம்பியர் நெக்சஸ் (Ampere Nexus) இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்பியர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலே, பல வாரங்களுக்கு பின்னர் தற்போது நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன.

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் சிறப்புகள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ampere nexus delivery started

கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட் (Greaves Cotton Limited) நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி அங்கமாக செயல்பட்டு வருகின்றது கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (Greaves Electric Mobility Private Limited) இதற்கு சொந்தமானதே ஆம்பியர் பிராண்டு ஆகும். தற்போது கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட் தன்னுடைய 16 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. முதல் கட்டமாக பெங்களூருவிலேயே தொடங்கப்பட்டு இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்பதற்காக நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பலதரப்பட்ட சிறப்பு வசதிகளை ஆம்பியர் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 136 கிமீ ரேஞ்ஜை தரும் வாகனமாக இதனை ஆம்பியர் வடிவமைத்திருக்கின்றது. இதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தமாகவே இரண்டு விதமான தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இஎக்ஸ் (EX) மற்றும் எஸ்டி (ST), இவையே அவை ஆகும். இந்த இரண்டிற்கும் இடையில் சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமே வித்தியாசம் தென்படுகின்றது. ரேஞ்ஜ் மற்றும் மின்சார மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அந்தவகையில், உயர்நிலை தேர்வான எஸ்டி-இல் நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், பகல்-இரவு நேர மோட் உள்ளிட்ட வசதிகள் கொண்ட 7 அங்குல டிஎஃப்டி திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இந்த அம்சங்கள் எதுவும் இஎக்ஸ் வேரியண்டில் இடம் பெற்றிருக்காது. அத்துடன், 6.2 அங்குல பிஎம்விஏ கிளஸ்டரே வழங்கப்பட்டு இருக்கும். நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 93 கிமீ ஆகும். இதற்காக 4.0 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனால், 16 டிகிரி சாய்வான மற்றும் ஏற்றமான பாதையிலும் இயங்க முடியும். இதுதவிர, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் ஓர் பிக்-அப் டிரக்கையே இழுத்துச் செல்ல முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்தகைய அதிக திறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளையே நாட்டில் ஆம்பியர் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களே மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அதற்கு வலுவான போட்டியை தரும் விதமாக ஆம்பியர் நெக்சஸ் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதன் சூப்பரான அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கட்டாயம் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு மிக சவாலானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 1,09,900 மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 11:07 [IST]
English summary
Ampere nexus electric scooter begins delivery in india aims to rival ola electric
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+