சிட்டி ரைடுக்கு சரியான சாய்ஸ்!! ஸ்கூட்டரை நேரில் பார்த்ததில் மெர்சலாகி விட்டோம் - புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆம்பியர் (Ampere) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக நெக்ஸஸை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ரூ.1.10 லட்சம் என்கிற அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இ.எக்ஸ் மற்றும் எஸ்.டி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் மிகவும் சிம்பிளாக உள்ளது. ஏனெனில், இந்த ஸ்கூட்டரை அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஃபேமலி இ-ஸ்கூட்டராக ஆம்பியர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நேரில் அருகாமையில் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை ஒரே வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை கீழே காணலாம்.

ஸ்கூட்டர் டிசைன் சிம்பிளாக வடிவமைக்கப்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம், புதிய ஆம்பியர் நெக்ஸஸ் ஸ்கூட்டர் மிகவும் இடவசதி உடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரை குளிர்விப்பதற்காக, முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் காற்று துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸான்ஸ்கர் அக்குவா, ஸ்டீல் கிரே, இந்தியன் சிவப்பு மற்றும் லூனார் வெள்ளை என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் நெக்ஸஸ் ஸ்கூட்டரை வாங்கலாம்.

ampere nexus electric scooter video

4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது. இதனுள் 3kWh, ஐபி67 சான்றிதழ் பெற்ற பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 136கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். நெக்ஸஸ் ஸ்கூட்டருடன் 15 ஆம்பியர் சார்ஜரை ஆம்பியர் நிறுவனம் வழங்குகிறது. கூடுதல் பணத்தை செலுத்தினால் 25 ஆம்பியர் சார்ஜரை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 14:08 [IST]
English summary
Ampere nexus electric scooter walkaround video in tamil check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+