டெய்லி யூஸுக்கு எது சரியாக இருக்கும்? டெக்னாலஜியில் பெரிய வித்தியாசம்... பட்ஜெட் விலையில் எது சிறந்தது?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஸ்கூட்டர்கள் என்று பார்த்தால், அவை ஆம்பியர் நெக்ஸஸ் மற்றும் ஏத்தர் ரிஸ்டா ஆகும். இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிசைன்: ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தை பொறுத்தவரையில், இது தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஃபேமலி ஸ்கூட்டர் ஆகும். ஸ்டைலுக்காக ஷார்ப்பான லைன்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், சிம்பிளான தோற்றத்துடன் நம்மை வசீக்கிறது. மறுப்பக்கம், ஏத்தர் ரிஸ்டா ஆனது கொஞ்சம் ஸ்டைலிஷானதாக வடிவமைக்கப்படுகிறது. அதேநேரம், அன்றாடம் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக ரிஸ்டா விளங்குகிறது.

ampere nexus vs ather rizta

தொழிற்நுட்ப வசதிகள்: இ.எக்ஸ், எஸ்.டி என ஆம்பியர் நெக்ஸஸ் ஸ்கூட்டர் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக டெக்னாலஜி வசதிகளுடன் வாங்குவதற்கு இதில் எஸ்டி வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், எல்இடி விளக்குகள், 5 ரைடு மோட்கள், ஸ்மார்ட்போன் கனெக்ட்டி வசதி உடன் 7-இன்ச் டிஎஃப்டி மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை நெக்ஸஸ் எஸ்டி வேரியண்ட்டில் பெறலாம்.

ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போல், ஏத்தர் ரிஸ்டாவும் எஸ் மற்றும் இசட் என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் இசட் வேரியண்ட்டில் ஸ்மார்ட் ஈக்கோ & ஜிப் என 2 ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், மொபைல் சார்ஜிங், ஆட்டோ ஹோல்ட் மற்றும் ரிவர்ஸில் செல்லும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். இதில் கொடுக்கப்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் உள்ளது.

மோட்டார் & பேட்டரி: ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி ஆனது இந்த ஸ்கூட்டரில் 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 136கிமீ தொலைவிற்கு செல்லலாம். 15 ஆம்பியர் சார்ஜர் உடன் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது. கூடுதல் பணத்தை செலுத்தினால், 25 ஆம்பியரிலும் சார்ஜரை பெறலாம்.

ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.7kWh பேட்டரி கொடுக்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 160கிமீ தொலைவிற்கு ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்லலாம். ஆனால், ரிஸ்டா எஸ் ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி பேக் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பேட்டரியின் அளவு குறைவதால், ஸ்கூட்டரில் ரேஞ்ச் கொஞ்சம் குறைவாகவே கிடைக்கும்.

விலை: ஆம்பியர் நெக்ஸஸ் இ.எக்ஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,09,900 ஆகவும், எஸ்டி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900 ஆகவும் தற்சமயம் உள்ளன. அதேநேரம், ஏத்தர் ரிஸ்டா எஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1,10,464 ஆக உள்ளது. ரிஸ்டா இசட் ஸ்கூட்டர் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,23,188 மற்றும் மற்றொன்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,45,548 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இரண்டும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பதால், தோற்றத்தை பொறுத்தவரையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், தொழிற்நுட்ப அம்சங்களில் ஏத்தர் ரிஸ்டாவின் கை ஓங்கியுள்ளது. ஆனால், அதற்கேற்ப ரிஸ்டாவின் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆதலால், போதுமான அடிப்படை மாடர்ன் வசதிகள் போதும் என நினைப்போர் ஆம்பியர் நெக்ஸஸை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2024, 22:20 [IST]
English summary
Ampere nexus vs ather rizta electric scooter comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+