ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் 30ம் தேதி தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த சில நாட்களாக தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆம்பியர் நிறுவனம் ஆம்பியர் என்எக்ஸ்ஜி என்ற கோடு பெயரை வைத்துள்ளது.

ampere nxg

ஆம்பியர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலுமாக புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்கு தயாராகியுள்ளது. வரும் 30ம் தேதி இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது கோட் பெயராக என்எக்ஸ்ஜி என்ற பெயரை வைத்திருந்தாலும், இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது நெக்ஸஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வருவதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆம்பியர் நிறுவனம் இந்த பெயரை தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிரேடு மார்க் செய்து வைத்திருந்தது. தற்போது இந்த ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும்போது பலரது கண்களுக்கு அகப்பட்டது. அப்பொழுது பல சுவாரசியமான விஷயங்கள் நமக்கு தெரிய வந்தது.

ampere nxg

அதன்படி அம்பியர் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக இட வசதியுடன் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் வடிவமைப்பில் உள்ள கர்வ் மற்றும் ஷார்ப் லுக்கிற்காக வழங்கப்படும் லைன்கள் எதுவும் இல்லை. நீட்டான சிம்பிளான டிசைன் கொண்டு இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நீளமான ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளதால் சீட்டும் நீளமாக இருக்கிறது. அதே நேரம் காலை வைக்க இடமும் போதுமான அளவுக்கு இருக்கிறது. இரண்டு பெரிய நபர்கள் தாராளமாக இந்த ஸ்கூட்டரில் அமர்ந்து செல்ல வசதிகள் உள்ளது. இதனால் கணவன் மனைவி ஷாப்பிங் செல்லும்போது இந்த ஸ்கூட்டரை எடுத்து சென்றால் ஷாப்பிங் செய்து விட்டு அந்த பொருட்களையும் இந்த ஸ்கூட்டரிலேயே வைத்து எடுத்து வர முடியும்.

இந்த ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை அனைத்து லைட்டுகளும் எல்இடி லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் சேஸிஸை பொறுத்தவரை அண்டர்போன் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன இந்த ஸ்கூட்டலில் 12 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆம்பியர் ஸ்கூட்டர்களிலேயே முதல் முறையாக முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஆம்பியர் நிறுவனம் தனக்கென ஒரு பெயரை பிடித்திருந்தாலும் சமீப காலமாக இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இதனால் மார்க்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவை நிறுவனம் சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த பின்னடைவிலிருந்து மீட்டுக் கொண்டு வர இந்நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் மிக முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆம்பியர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்து தயாரித்து வரும் முன்னணி நிறுவனமாக இருந்தாலும். சமீபத்தில் ஏத்தர்,ஓலா ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட தயாரிப்புக்கு இணையாக தன்னிடம் தயாரிப்புகள் இல்லாமல் விற்பனையில் மந்தத்தை சந்தித்து வந்தது. தற்போது ஏத்தர் ரிஸ்டா மற்றும் ஓலா எஸ்ஒன் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக என்எக்ஸ்ஜி என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இறக்குவது களத்தில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2024, 7:00 [IST]
English summary
Ampere nxg electric scooter launch april 30
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+