ஓலா நாளைக்கு இருக்குமானே தெரியல.. ஒன்னில்ல, ரெண்டில்ல 10 ஆயிரம் ரூபாவை குறைத்த ஆம்பியர்!
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்திற்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைச் செய்து வரும் நிறுவனங்களில் ஆம்பியர் (Ampere)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமல்ல ஆஃபர்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை விற்பனையில் விஞ்சுவதற்காக ஆம்பியர் நிறுவனம் அதன் இரண்டு முக்கிய தயாரிப்புகளின் விலையையும் குறைத்திருக்கின்றது. விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அல்ல.. 10 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆம்பியர் நிறுவனத்தின் கீழ் இப்போதைய நிலவரப்படி 6 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. பிரைமஸ் (Primus), ஜூல் இஎக்ஸ் (Zeal EX), ரியோ எல்ஐ பிளஸ் (Reo Li Plus), மேக்னஸ் (Magnus), ஆம்பியர் மேக்னஸ் ஸ்பெஷல் (Magnus Special) மற்றும் நெக்சஸ் (Nexus) ஆகியவையே அவை ஆகும்.
இதில் ரியோ எல்ஐ பிளஸ் மற்றும் மேக்னஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையையே ஆம்பியர் நிறுவனம் குறைத்திருக்கின்றது. ரியோ எல்ஐ பிளஸ் முன்னதாக ரூ. 69,900க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலையில் ரூ. 10 ஆயிரம் வரை ஆம்பியர் குறைத்திருக்கின்றது.
ஆகையால், தற்போது அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 59,900க்கு விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக மேக்னஸ் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது.
மேக்னஸ் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேக்னஸ் இஎக்ஸ் (Magnus EX) மற்றும் மேக்னஸ் எல்டி (Magnus LT) ஆகியவையே அவை ஆகும். இதில் மேக்னஸ் இஎக்ஸ் ரூ. 104,900-க்கு விற்கப்பட்டு வந்தது. இதன் விலையில் ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.
ஆகையால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தற்போது 94,900 ரூபாய் என்கிற புதிய விலையில் விற்கப்படுகின்றது. மேக்னஸ் எஸ்டி தேர்வின் விலையில் ரூ. 9 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தற்போது 84,900 ரூபாக்கு தற்போது விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேக்னஸ் எளெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் முதல் 7 நேரங்கள் வரை தேவைப்படும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வரை ஆகும்.
ரியோ எல்ஐ பிளஸ் ஓர் மெதுவாக செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். 120 கிலோ வரையிலான எடையைத் தாங்கும் திறன் இதற்கு உண்டு. ஓர் முழு சார்ஜில் 70 கிமீ தூரம் வரை நம்மால் இதில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் முதல் 6 மணி நேரமே போதுமானது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் ஓலாவே தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு போட்டிய அளிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே தற்போது ஆம்பியர் அதன் இ-ஸ்கூட்டர்கள் சிலவற்றின் விலையை குறைத்திருக்கின்றது. ஆம்பியரின் இந்த மந்திரம் மிக சிறப்பாக வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








