ஓலாவ சம்பவம் பண்ண போறாங்க.. ஆம்பியர் இந்தியாவுல இப்படி ஒரு வேலையை பாத்துட்டு வருதா!

இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம். நாட்டில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களின் பட்டியலில் ஓலா எலெக்ட்ரிக் பிராண்டின் தயாரிப்புகளே முதல் இடத்தில் உள்ளன. இதனால் இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் அறிவிக்கப்படாத தலைவனாகவும் ஓலா மாறி இருக்கின்றது.

எனவே இந்த நிறுவனத்தையே மிகப் பெரிய போட்டியாக எண்ணி செயல்பட்டு வருகின்றன போட்டி நிறுவனங்கள். அந்தவகையில், இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆம்பியர் (Ampere), ஓலாவிற்கு போட்டியளிக்கும் வகையில் இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் இரண்டு வாகனங்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Ampere primus

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. ஆம்பியர் நிறுவனம் சமீபத்தில் ஆம்பியர் நெக்ஸஸ் (Ampere Nexus) மற்றும் ஆம்பியர் அஸ்பைரஸ் (Ampere Aspirus) எனும் வாகனங்களுக்கான பெயர்களுக்கு டிரேட்மார்க் (Trademark) பதிவு செய்ததன் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. சமீப சில நாட்களாக நிறுவனம் சில புதுமுக வாகனங்களை இந்திய சாலையில் வைத்து தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி வந்தநிலையில், தற்போது அது இரண்டு புதிய பெயர்களுக்கான வர்த்தக பதிவைச் செய்திருக்கின்றது.

ஆகையால், நிறுவனம் அடுத்தடுத்து என இரண்டு புதுமுக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த இரண்டில் ஒன்று நிறுவனத்தின் புகழ்பெற்ற என்எக்ஸ்ஜி கான்செப்ட் மாடலை தழுவியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நெக்ஸஸ்ஸே அதுவாக இருக்கும் என பலரால் நம்பப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆம்பியர் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் 'தி நெக்ஸ் பிக் திங்' ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றது. எனவே நிறுவனம் இரண்டில் முதலில் நெக்ஸஸ் மாடலையே விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது என்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என்பது உறுதியாக தெரியவில்லை.

அதேவேளையில், நிறுவனத்தின் மற்ற பிரபல தயாரிப்புகளை வைத்து பார்க்கையில் பெரிய திரை, ஃப்ளஷ் மவுண்டட் பில்லியன் ஃபூட் பெக், எல்இடி லைட்டுகள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பல பிரீமியம் தர அம்சங்கள் எலெக்ட்ரிக் நெக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், அஸ்பைரஸ் மாடலும் அதிக பிரீமியம் தர அம்சங்களைத் தாங்கியதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், தனி நபர் பயன்பாட்டிற்கான வாகனமாக அல்லாமல் பிசினஸ் -டூ- பிசினஸ்க்கான வாகனமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, டெலிவரி மற்றும் இன்னும் பிற வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனமாகவே அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே கூறுகின்றன.

ஆனால், இந்த வாகனங்கள் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஆம்பியர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி ஆம்பியர் நிறுவனம் பிரைமஸ், ஜூல் இஎக்ஸ், ரியோ லை பிளஸ், மேக்னஸ் எல்டி/இஎக்ஸ், மேக்னஸ் ஸ்பெஷல், நெக்ஸ் பிக் திங் ஆகிய மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே விரைவில் நெக்ஸஸ் மற்றும் அஸ்பைரஸ் ஆகிய புதுமுக மாடல்கள் இணைய இருக்கின்றன. இவற்றின் வருகை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய தலை வலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த புதுமுக வாகனங்கள் என்ன மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்டு விற்பனைக்கு வருகின்றது என்பதைப் பொருத்தே அது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தலைவலியாக மாறுமா இல்லையா என்பது தெரிய வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் அசைக்க முடியாத நிறுவனமாக மாறி இருக்கின்றது. அதற்கு போட்டியாக பெரும் ஜாம்பவான் நிறுவனங்கள் கால் தடம் பதித்தும், அவற்றால்கூட ஓலா எலெக்ட்ரிக்கிற்கு போட்டியளிக்க முடியவில்லை. இதன் விளைவாகவே இந்தியாவில் தொடர்ச்சியாக மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் முதல் இடத்தில் ஓலா எலெக்ட்ரிக் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 19:20 [IST]
English summary
Ampere trademarked nexus and aspirus ev names in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+