ஸ்பிளெண்டரகூட இப்படி டெலிவரி செஞ்சிருப்பாங்களா தெரியல! ஒரே நாளில் டெலிவரி செய்யப்பட்ட 51யூனிட் அப்ரில்லா பைக்!

ஒரே நாளில் ஒரே பைக் மாடலின் 51 யூனிட்டுகளை ஒரே இடத்தில் வைத்து டெலிவரி செய்திருக்கின்றது பிரபல பைக் உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா (Aprilia). நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றாக ஆர்எஸ் 457 (RS457) இருக்கின்றது. இந்த மாடலின் 51 யூனிட்டுகளையே அப்ரில்லா தற்போது இந்தியாவில் டெலிவரி கொடுத்திருக்கின்றது. தலைநகர் டெல்லி-யிலேயே இந்த சம்பவத்தை அப்ரில்லா நிகழ்த்தி இருக்கின்றது. 51 யூனிட்டுகள் டெலிவரி என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதனால்தான் அப்ரில்லா இந்த நிகழ்வை ஓர் விழாவைப்போல கொண்டாடி இருக்கின்றது.

சமீபத்தில் திறக்கப்பட்ட தன்னுடைய முதல் மோட்டோபிளக்ஸ் விற்பனையாளர் வாயிலாகவே இந்த டெலிவரி சம்பவத்தை அப்ரில்லா செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிரத்யேக விற்பனையாளர் பவானி ஆட்டோ என்கிற பெயரிலேயே டெல்லியில் இயங்கி வருகின்றது என்பத கவனிக்கத்தகுந்தது. வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் எக்ஸ்பீரியன்ஸை வழங்கக் கூடிய ஓர் சூப்பரான டீலர்ஷிப்பே இதுவாகும்.

Aprilia delivers 51 unit rs457 in single day

அப்ரில்லாவின் முன்னணி பைக் மாடல்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, மோட்டோ குஸ்ஸி வரிசையில் உள்ள குறிப்பிட்ட சில தயாரிப்புகளும் இங்கே கிடைக்கும். மேலும், வெஸ்பா ஸ்கூட்டர்களையும் இந்த டீலர்ஷிப் வாயிலாக அப்ரில்லா விற்பனைச் செய்ய இருக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அப்ரில்லா அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார்சைக்கிள்களான ஆர்எஸ் 457 (RS457), ஆர்எஸ் வி4 ஃபேக்டரி (RSV4 Factory), ஆர்எஸ் 660 (RS660), டுவோனோ 660 (Tuono 660) மற்றும் டூரெக் (Tuareg 660) ஆகியவற்றையும், அப்ரில்லா எஸ்ஆர் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் பைக் மாடல்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.

இத்துடன், மோட்டோ குஸ்ஸி வரிசையில் உள்ள வி7 ஸ்டோன் (V7 Stone), வி85 டிடி (V85 TT), வி85 ஸ்ட்ரடா (V85 Strada) மற்றும் வி85 டிடி டிராவல் (V85 TT Travel) ஆகிய பைக் மாடல்களே இந்த டீலர் வாயிலாக விற்கப்பட உள்ளன. இதுதவிர, வெஸ்பா இசட்எக்ஸ் (Vespa ZX), விஎக்ஸ்எல் (VXL) மற்றும் எஸ்எக்ஸ்எல் (SXL) ஆகிய ஸ்கூட்டர்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த நிலையிலேயே 51 யூனிட் அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக் மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அப்ரில்லாவின் மிகவும் கவர்ச்சியான மற்றும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட பைக் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே இந்த பைக்கிற்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இதற்கு சான்றாகவே ஒரே நாளில் அந்த பைக் மாடலின் 51 யூனிட்டுகள் டெலிவரிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் அப்ரில்லா ஆர்எஸ் 457 ரூ. 4.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக் ஓர் 457 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும்.

பாரல்லல் ட்வின் சிலிண்டர் மோட்டாரையே இந்த பைக் கொண்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 48 என்எம் டார்க்கை ஆற்றலையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், சிறந்த நிறுத்தத்தைப் பெறும் விதமாக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதோபோல், மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், மூன்று விதமான ரைடிங் மோட்கள், மூன்று விதமான லெவல்களைக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் பல சிறப்பம்சங்களை இந்த பைக் மாடல் தனக்குள் தாங்கி இருக்கின்றது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்டிருப்பதும் இந்த பைக்கிற்கு இந்தியாவில் சிறந்த வரவேற்புக் கிடைக்கதற்கு காரணமாக உள்ளது. ஏன், இந்த பைக்கை பிரபல இந்தி திரைப்பட நடிகரான ஜான் ஆபிரகாமும் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் அப்ரில்லா ஆர்எஸ்457 இன் வருகை பல்வேறு பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. அந்தவகையில், கேடிஎம் ஆர்சி 390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 400 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கே மிகப் பெரிய போட்டியாளனாக அது விளங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் பைக் விரும்பிகள் பலரை அப்ரில்லா ஆர்எஸ்457 தன் வசம் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாக 51 யூனிட் டெலிவரி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த பைக்கை அறிமுகம் செய்த அன்றே அதன் டெலிவரி பணிகளை அப்ரில்லா தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 20:29 [IST]
English summary
Aprilia delivers 51 units rs457 via its first motoplex dealership in delhi
மேலும்... #aprilia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+