பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கிற்கான அபிஷியல் ஆக்ஸஸரீகள் அவற்றின் விலைகள் உடன் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கூடுதலாக என்னென்ன பொருட்கள் உடன் ஆர்.எஸ்457 பைக்கை அலங்கரிக்கலாம் என்பதை பற்றியும், இதற்கு ஆகும் செலவை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அப்ரிலியா நிறுவனத்தின் பைக்குகள் என்றாலே விலைமிக்கவையாக இருக்கும் என்கிற கருத்து நம் இந்திய மக்கள் மத்தியில் உள்ளது. இதனை உடைக்கும் விதமாகவே, ஆர்.எஸ்457 என்ற தனது புதிய சூப்பர் பைக்கை குறைந்த விலையில் களமிறக்க அப்ரிலியா முடிவு செய்தது. விலை குறைவான அப்ரிலியா பைக் என்பதால் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாகவே எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆர்.எஸ்457 பைக்கை இந்தியாவில் அப்ரிலியா நிறுவனம் அறிமுகம் செய்தது. விலை குறைவான அப்ரிலியா பைக் என கூறப்பட்டாலும், ஆர்.எஸ்457 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.10 லட்சம் ஆகும். ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.5 லட்சத்தை தாண்டிவிடும். இத்தாலியன் ஸ்டைலில் தோற்றத்தை கொண்டிருப்பினும், இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா அப்ரிலியா பைக் ஆகும்.
இந்த நிலையில், அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கிற்கான அபிஷியல் ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த ஆக்ஸஸரீகளை மொத்தமாக வாங்குவதற்கு ஏறக்குறைய ரூ.1.50 லட்சம் தேவைப்படும். அதாவது, பைக்கின் விலை உடன் சேர்த்து இந்த ரூ.1.50 லட்சத்தையும் கொடுத்தால், ஆர்.எஸ்457 பைக் இன்னும் ஸ்டைலானதாகவும், பாதுகாப்பானதாகவும் கிடைக்கும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளில், இருப்பதிலேயே குறைந்த விலையில் நீளமான விண்ட் ஸ்க்ரீனை வாங்கலாம். இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ரூ.899 ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதியை பெற கூடுதலாக ரூ.949 செலுத்த வேண்டியிருக்கும். பைக்கின் பின் இருக்கையை மறைக்கும் விதத்திலான மூடியையும் வாங்கி பொருத்தி கொள்ளலாம். பைக்கின் ஸ்டைலுக்காக வழங்கப்படும் இதற்கு ரூ.1,499 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட்டை பைக்குடன் கட்டி வைப்பதற்கான வயர் பூட்டுக்கு ரூ.1,899 விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லிவருக்கு 5,449 ரூபாயும், பைக் கீழே விழ நேர்ந்தால் பாதுகாக்கும் புரோடெக்டருக்கு 8,725 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பிரேக் பேட்களுக்கு பதிலாக, ரேசிங் பேட்களை வாங்குபவர்கள் ரூ.9,349ஐ கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

பைக் கவருக்கு சுமார் ரூ.16,875 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையில் எந்த மாதிரியான பைக் கவர் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை. கியர்களை விரைவாகவும், சவுகரியமாகவும் மாற்ற உதவும் கருவியை ரூ.27,799ஐ செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். காரின் டயர்களில் உள்ள காற்று அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கும் சிஸ்டத்துக்கு கூடுதலாக ரூ.28,749 வழங்க வேண்டும்.
முன் பிரேக் லிவருக்கான பாதுகாப்பு செட்-அப்பை ரூ.29,825 கொடுத்து உங்கள் ஆர்.எஸ்457 பைக்கிற்கு வாங்கி கொள்ளலாம். பைக் திருடப்படுவதை எலக்ட்ரிக் மூலமாக எச்சரிக்கும் சிஸ்டத்துக்கு ரூ.29,925 விலை ஆகும். இதுதான், அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஆக்ஸஸரீகளில் மிகவும் விலையுயர்ந்தது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்ரிலியா ஆர்.எஸ்457 சாதாரணமாக பார்ப்பதற்கே சூப்பராக இருக்கும். அதேபோல், ஓட்டுவதற்கும் ஆர்.எஸ்457 செம்மையாக இருக்கிறது. இந்த பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்து டெஸ்ட் ரைடு ரிவியூவை ஏற்கனவே வழங்கியுள்ளோம். இப்படிப்பட்ட பைக்கை இன்னும் மெருக்கேற்றும் வகையில் ஆக்ஸஸரீகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரூ.5 லட்சம் கொடுத்து பைக் வாங்க தயாராக இருப்பவர்கள் ரூ.1.5 லட்சத்திற்கு ஆக்ஸஸரீகளை வாங்க தயங்க மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









