இந்த 2024ஆம் ஆண்டிலேயே வாங்குபவர்களுக்கு செம்ம லக்கு... இப்போவே புக் பண்ணி வெச்சிடுங்க!!
ஏப்ரிலியா (Aprilia), முழுக்க முழுக்க இத்தாலியன் ஸ்டைல் பைக் நிறுவனம். இத்தாலியில் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் பியாஜியோ (Piaggio) க்ரூப்பின் கீழ் ஏப்ரிலியா செயல்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், பல விலையுயர்ந்த பைக்குகளை ஏப்ரிலியா விற்பனை செய்கிறது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப கொஞ்சம் குறைந்த விலையில் ஆர்.எஸ்457 (RS457) பைக்கை சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதனாலேயே ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில், இந்த பைக்கின் விலை உயர்த்தப்பட உள்ளது. அதனை பற்றிய விரிவான விபரங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் விலை குறைவான பைக்குகளுக்கே நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், ஏப்ரிலியா நிறுவனமோ அதன் பவர்ஃபுல்லான பைக்குகளுக்காக பெயர் பெற்றதாக உள்ளது. இருப்பினும், எப்படியோ சில விஷயங்களை அட்ஜெஸ் செய்து, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்.எஸ்457 பைக்கை இந்தியாவில் ஏப்ரிலியா அறிமுகம் செய்தது.

இந்த பைக்கின் விலை தான் வருகிற 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. புதிய 2025ஆம் ஆண்டை பல்வேறு வாகனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்க உள்ளன. ஆதலால், புதியதாக எதாவது வாகனங்களை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், முடிந்தவரையில் இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாகவே புக் செய்துவிடுவது நல்லது.
இதன்படி, கஸ்டமர்கள் ஷோரூமுக்கு அதிகம் வருவார்கள் என்பது ஏப்ரிலியா நிறுவனத்திற்கும் தெரியும். இருப்பினும் தயக்கம் காட்டும் சில வாடிக்கையாளர்களையும் கவரும் முயற்சியாக சலுகைகளை கேடிஎம், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், ஏப்ரிலியா போன்ற சில நிறுவனங்கள் இன்னும் 1 மாதம் கழித்து கொண்டுவர போகிற விலை உயர்வை இப்போதே அறிவித்துள்ளன.

2025 ஜனவரி 1 முதல் ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கின் விலை ரூ.10,000 உயர்த்தப்பட உள்ளது. தற்போது இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.10 லட்சமாக உள்ளது. இது ரூ.4.20 லட்சமாக உயர உள்ளது. ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவுக்காக ரூ.4 லட்சத்தில் ஒரு பைக்கை கொண்டுவரும் முயற்சியாக ஆர்.எஸ்457 பைக்கை அறிமுகம் செய்தது.
இருப்பினும், இந்த பைக்கின் விலை ஏற்கனவே ரூ.4.10 லட்சமாக இருக்கும் நிலையில், வருகிற ஜனவரி முதல் மேலும் ரூ.10,000 உயர்த்தப்பட உள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் ஆர்.எஸ்457 பைக்கை வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வருட-இறுதி சலுகையையும் ஏப்ரிலியா அறிவித்துள்ளது. இதன்படி பார்த்தால், இந்த 2024ஆம் ஆண்டிலேயே இந்த ஏப்ரிலியா பைக்கை வாங்குவோர் ரூ.15,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம்.

ஸ்டாண்டர்ட் மற்றும் குயிக் ஷிஃப்டர் என 2 விதமான வேரியண்ட்களில் ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதில் குயிக் ஷிஃப்டர் வேரியண்ட்டின் விலை ரூ.7,000 அதிகமாக உள்ளது. 2025 முதல் இந்த வேரியண்ட்டின் விலையும் ரூ.10,000 உயர்த்தப்பட்டு, ரூ.4.27 லட்சமாக நிர்ணயிக்கப்படும். இந்த இரு வேரியண்ட்களிலும் 457சிசி லிக்யுடு-கூல்டு, 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 9,400 ஆர்பிஎம்-இல் 46.9 பிஎச்பி மற்றும் 6,700 ஆர்பிஎம்-இல் 43.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதனுடன் அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச்சும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. 13 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்ட ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கின் புதிய விலை ரூ.4.20 லட்சமானது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வந்துவிடும். இருப்பினும், இத்தாலியன் ஸ்டைலிலான ஏப்ரிலியா பைக்கை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஆர்.எஸ்457 சிறந்த தேர்வாகும். ஏனெனில், இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏப்ரிலியா பைக் இதுவாகும்.


Click it and Unblock the Notifications









