ரூ.4.5 லட்சத்தில் வாங்க சரியான பைக்!! ஒட்டுமொத்தமாக பைக் எப்படி இருக்கு? தமிழ் டெஸ்ட் ரைடு ரிவியூ!

ஏப்ரிலியா (Aprilia) நிறுவனம் அதன் புதிய மோட்டார்சைக்கிளாக ஆர்.எஸ்457 மாடலை கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 2023 இந்தியன் பைக் வார கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற ஏப்ரிலியா பைக்குகளை காட்டிலும் மாடர்ன் தோற்றத்தில் ஜொலிக்கும் ஆர்.எஸ்457 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.10 இலட்சம் ஆகும்.

ஸ்டாண்டர்ட் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஏப்ரிலியா பைக்கில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்த பைக்கை ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் தெரிந்துக் கொண்ட விஷயங்களை தமிழில் ரிவியூவாக வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

ஏப்ரிலியாவின் ஆர்.எஸ் பைக்குகளுக்கு உண்டான தோற்றத்தில் புதிய ஆர்.எஸ்457 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் பார்ப்பதற்கு கொஞ்சம் அகலமானதாக தெரியலாம். ஆனால், ஆர்.எஸ்457 பைக்கை மிகவும் ஏரோடைனாமிக்ஸுக்கு ஏற்ப ஏப்ரிலியா வடிவமைத்துள்ளது. குறிப்பாக, பைக்கின் முன்பக்கம் ட்ரிபிள் எல்இடி ஹெட்லைட் செட்-அப் உடன் எதிர்வரும் காற்றை பிளந்து செல்லக்கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

aprilia rs457 test ride video

இதற்கேற்ப இந்த பைக்கில் ரைடிங் பொசிஷனும் நன்கு சாய்வானதாக உள்ளது. இதனால், ரேஸ் டிராக்குகளுக்கு மிகவும் சரியான பைக் ஆர்.எஸ்457 ஆகும். அதேநேரம், ஃபுட் பெக்ஸை தாழ்வானதாக மாற்றுவதன் மூலமும், ஹேண்டில்பாரை தனது ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலமும் ஆர்.எஸ்457 பைக்கை தினசரி போக்குவரத்துக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். இந்த பைக்கில் 457சிசி இணையான இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 17, 2024, 11:37 [IST]
English summary
Aprilia rs457 test ride review video in tamil check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+