இந்த பைக்கிற்கு இவ்வளவு டிமாண்ட்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! எவ்வளவு பேர் வெயிட்டிங் தெரியுமா?
அப்ரிலியா நிறுவனம் தனது ஆர்எஸ்457 என்ற பைக்கை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த பைக்கிற்கான காத்திருப்பு காலம் என்பது அதிகமாகியுள்ளது. அதாவது இந்த பைக்குக்கான புக்கிங் என்பது அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் எப்படி இந்தியாவில் இந்த பைக்கை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது? இதன் காத்திருப்பு காலத்தை குறைக்க இந்நிறுவனம் என்ன செய்யப் போகிறது? தற்போது எவ்வளவு பைக்குகளை அந்நிறுவனம் தயாரிக்கிறது? இந்த பைக்கை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள்? என்பது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
அப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ் 457 என்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை இந்தியாவில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கை நிறுவனம் அறிமுகப்படுத்தும்போது எதிர்பார்த்த அளவைவிட தற்போது மக்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரூபாய் 4.10 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது.

மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக இருப்பதால் இந்தியாவில் இந்த பைக்கை அதிகம் பேர் வாங்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள். போட்டி நிறுவனங்களில் பைக்கை விட இந்த பைக்கின் விலை குறைவாக இருப்பதால் ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்கள் மத்தியில் இந்த பைக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அப்ரிலியா நிறுவனம் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முக்கியமான காரணம் அந் நிறுவனம் இந்த பைக்கை புனேவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது தான். அந்த ஆலையை தயாரிக்கப்படும் பைக்கில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த பைக்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஏகப்பட்ட புக்கிங் குவிக்கிறது. இதன் காரணமாக இந்த பைக்கை வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதமாக மாறிவிட்டது. இன்று இந்த பைக்கை புக் செய்தால் இரண்டு மாதத்திற்கு பிறகு தான் டெலிவரி எடுக்க முடியும்.
அப்ரிலியா நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பை தற்போது தீவிரப் படுத்தி உள்ளது. அந்த ஆலையில் மூன்று ஸ்விஃப்டுகளாக பணி அமர்த்தப்பட்டு ஊழியர்கள் இந்த பைக்கை தயாரித்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு 50 ஆர்எஸ்457 பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் புக்கிங் வருவதால் இந்த பைக்கின் தயாரிப்பு கொள்ளளவை உயர்த்துவதற்காக நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தென்னிந்தியா மற்றும் மேற்கிந்திய பகுதிகளில் இந்த பைக்கின் விற்பனை அதிகரித்துள்ளது. வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியா பகுதிகளில் பெரிய அளவில் இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்கவில்லை. ஆனால் இந்த பகுதியிலும் விரைவில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் தற்போது எடுத்து வருகிறது.
அப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கை பொறுத்தவரை கொடுக்கும் காசை விட அதிகமான பலன்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த பைக்கின் வடிவமைப்பு இதில் உள்ள அம்சங்கள் இதன் இன்ஜின் எல்லாமே சிறப்பாக இருப்பதாக இந்த பைக்கை ஓட்டுபவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் சுலபமான ஹேண்ட்லிங் தான் மக்களை இந்த பைக்கை வாங்க வைக்கிறது.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பொருத்தவரை 457 சிசி பெரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 46.9 பிஎச்பி பவரையும், 43.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கியர் பாக்ஸ் உடன் மேனுவல் உடன் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது. இதனால் இந்த பைக்கை விரும்பும் ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்ரிலியா நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களம் இறக்கியபோது இந்தியாவில் இந்த ரக பைக்குகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்ற பேச்சு நிலவியது. ஆனால் அதையும் மீறி தற்போது வாகன தயாரிப்பு நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான புக்கிங் பெற்றுள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் மீதான விருப்பம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









