ஏத்தரோட இந்த இ-ஸ்கூட்டர் விற்பனையான மாதிரிதான்.. செய்ய கூடாத ஒன்றை செஞ்சு தொலச்சுட்டாங்க! என்ன நடக்குமோ!
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது அதன் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த மாடலின் விலையை அது உயர்த்தி இருக்கு? எவ்வளவு ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது? மற்றும் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஏத்தர் எனெர்ஜி அதன் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலையையே தற்போது உயர்த்தி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஏத்தர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தின்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ. 1.89 லட்சம் விலை நிர்ணம் செய்யப்பட்டது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே இதன் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 6 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆகையால், தற்போது ஏத்தர் 450 அபெக்ஸ்-இன் விலை ரூ. 1.95 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் சில முன்னணி நிறுவனங்கள் விலை குறைவான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், சில நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விலையைக் குறைத்த வண்ணம் இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் ரூ. 6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதனால், நிறுவனத்தின் அதிகம் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக அது மாறி இருக்கின்றது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவும் இது காட்சியளிக்கின்றது.
இதற்காக, ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 7kW மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இது 450 எக்ஸ் மாடலைக் காட்டிலும் 10 கிமீ அதிக வேகம் ஆகும்.
இந்த வேகத்தை அது வெறும் 2.9 செகண்டுகளிலேயே எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 'மேஜிக் ட்விஸ்ட்' எனும் வசதியையும் முதல் முறையாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் அட்வான்ஸ்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். முழு எஞ்சின் ஹால்ட்டை இந்த தொழில்நுட்பம் மேற்கொள்ளும்.
ஆகையால், 100 சதவீதம் மின்சார விரையம் தவிர்க்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த அம்சத்தால் நகர்புற பயணம் மிக சிறந்ததாக மாறும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளையும் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் எனெர்ஜி வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 3.7 kWh பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 157 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், ஏத்தர் 450 அபெக்ஸ் ஓர் சிறப்பு பதிப்பு என்றும், அது 8 முதல் 9 மாதங்கள் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஏத்தர் தன்னுடைய லேட்டஸ்ட் தயாரிப்பின் விலையை உயர்த்தியது. இதனால் இதன் விற்பனை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதாந் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








