ஓலாவை எப்படியாச்சும் ஒழிச்சு கட்டிடணும்.. கங்கணம் கட்டிய இந்திய நிறுவனம்! லாபமே வேண்டாம்னு முடிவு பண்ணிருச்சா!

லாபம் கிடைக்கலைனாலும் பரவாயில்ல என பெரும் தொகையை இந்திய நிறுவனம் ஒன்று அதன் இருசக்கர வாகனத்தின் விலையில் இருந்து குறைத்து இருக்கின்றது. அது எந்த நிறுவனம்? எவ்வளவு ரூபாய் குறைத்து இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை தாயமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)யும் ஒன்றும். இது கர்நாடகா மாநிலம், பெங்களுருவைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்திய மின்சார இருசக்கர வாகன உலகில் அசைக்க முடியாத ஓர் பிராண்டாக இது உருவெடுத்து இருக்கின்றது.

Ather 450s price cut

இருப்பினும், இதனால் ஓலா எலெக்ட்ரிக்கிற்கு பெரிய அளவில் போட்டிக் கொடுக்க முடியாத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு, ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன மாடல் ஒன்றின் விலையைக் குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏத்தர் 450எஸ் மாடலின் விலையையே அது குறைத்து இருக்கின்றது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், ஏத்தர் 450எஸ் மாடலை ரூ. 1.09 லட்சத்திற்கு விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இது பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதேவேளையில், தலைநகர் டெல்லியில் இதே வாகனம் ரூ. 97,500 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விலை குறைப்பிற்கு பின்னர் கிடைக்கும் விலை விபரம் இதுவாகும். 125 சிசி பெட்ரோல் டூ-வீலர்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே 450எஸ் ஆகும். இதேபோல், தொழில்நுட்பம் மற்றும் மற்ற விஷயங்களிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறந்ததாகவேக் காட்சியளிக்கின்றது.

இதில், அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 2.9 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிலோ மீட்டர் தூரம் வரை டிராவல் செய்ய முடியும். 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கணிசமான அளவில் சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், டர்ன் -பை- டர்ன் (திருப்பத்திற்கு திருப்பம்) வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் கொண்ட 17.7 அங்குல திரை கூட இந்த எலெக்டரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதுதவிர, பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்ட், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், மோனோஷாக் சஸ்பென்ஷன், சைடு ஸ்டாண்டு சென்சார்கள், ஆட்டோ இன்டிகேட்டர் கட்-ஆஃப், கைடு -மீ- ஹோம் மின் விளக்கு, கோ இன்காக்னிட்டோ, சைடு ஸ்டெப் உள்ளிட்ட அம்சங்களையும் ஏத்தர் வழங்கி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ப்ரோ எனும் ஆட்-ஆன் வசதியை ஏத்தர் வழங்குகின்றது. இந்த பேக்குடன் நீங்கள் ஏத்தர் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்பட்சத்தில் உங்களால் ரூ.25ஆயிரம் வரை குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். மேலும், ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வண்ண தேர்வில் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது. அவை, காஸ்மிக் கருப்பு, ஸ்டில் ஒயிட், சால்ட் கிரீன் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் புரட்சியைச் செய்யும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே 450 எஸ் ஆகும். இதன் விலையில் 20 ஆயிரம் ரூபாய் வரை குறைத்திருப்பது ஓலா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 23:36 [IST]
English summary
Ather 450s price cut upto 25 thousand here is more details
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+