பழைய ஸ்கூட்டரை எக்ஸ்சேஞ்ச் செய்து ஏத்தரின் புது இ-ஸ்கூட்டரை வாங்கலாம்.. யார் யாரால் எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியும்

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), எக்ஸ்சேஞ்ச் (Exchange) திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. சில நிபந்தனைகளுடன் இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது. அது என்ன? யார் யாருக்கெல்லாம் இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டம் பொருந்தும் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எக்ஸ்சேஞ்ச் என்ற உடன் பெட்ரோல் டூ-வீலருக்கு என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஏத்தர் எனெர்ஜி அறிவித்து இருக்கும் இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டம் அதன் பழைய தயாரிப்பை கொடுத்து புதிய தயாரிப்பிற்கு அப்கிரேட் ஆகுவதற்கானது ஆகும். அதிலும், அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த திட்டம் பொருந்தாது.

Ather exchange program

சில மாடல் மற்றும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். மேலும், முதல் கட்டமாக பெங்களூருவிற்கு மட்டுமே இது அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஏத்தர் அதன் தயாரிப்பை விற்பனைச் செய்யும்போது அதன் உடன் சேர்த்து ஏத்தர் அப்கிரேட் (Ather Upgrade Scheme) எனும் திட்டத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

இதன்கீழ் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கியவர்களுக்கே தற்போது எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. 2023 ஜனவரியிலேயே ஏத்தர் அப்கிரேட் திட்டத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே பழைய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்திருப்பவர்களால் புதிய ஒன்றான 450அபெக்ஸ் மாடலை வாங்கிக் கொள்ள முடியும்.

மார்ச் 31 வரை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் எக்ஸ்சேஞ்ச் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏத்தர் 450 ஜென் மற்றும் 450 ஜென் 1.5 இரண்டு பனாளர்களும் விருப்பம் இருக்கும் எனில் புதிய 450 அபெக்ஸ் இ-ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

ஒரே நாளில் இந்த எக்ஸ்சேஞ்ச் வேலையை செய்துவிட முடியம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் வாகனங்கள் பெங்களூர் இந்திரா நகரில் உள்ள ஏத்தர் மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ஏத்தர் ஊழியர்கள் ஸ்கூட்டரை ஆய்விற்கு உட்படுத்துவர். இயக்க நிலை, பேட்டரி பேக் திறன் ஆகியவற்றை அவர்கள் சரிபார்ப்பார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுதவிர, விதிமீறலுக்கான அபராத செல்லாண் மற்றும் வேறு ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டு இருக்கின்றதா என்பது பற்றிய தகவலையும் நிறுவனம் ஆராய இருக்கின்றது. இந்த சரிபார்ப்புகளுக்கு பின்னரே ஸ்கூட்டரை நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் செய்யும். அதேவேளையில், சட்ட சிக்கல் ஏதேனும் வாகனம் மீது இருக்கும் எனில் அந்த வாகனம் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படாமல் தவிர்க்கப்படலாம்.

இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் அபெக்ஸ் 450 மட்டுமல்ல 450எக்ஸ் மாடலையும் வாங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக, நீங்கள் வைத்திருப்பது 36 மாத கால பழைய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பின், மேலும், நீங்கள் தேர்வு செய்வது அபெக்ஸ் 450 எனில் நீங்கள் கூடுதலாக ரூ. 1.10 லட்சமும், 450 எக்ஸ் மாடலை பெற வேண்டும் எனில் ரூ. 90 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை செலுத்த வேண்டும்.

ஏத்தர் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ரிஸ்தா எனும் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆக்டிவாவைவிட பெரிய இருக்கை, அதிக பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதி, நீரில் பயணிக்கும் திறன் என ஏகப்பட்ட சிறப்புகளுடன் இந்த வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் இன்னும் சில நாட்களில் அரங்கேற இருக்கின்றது. ஏப்ரல் 6ஆம் தேதியே ரிஸ்தா அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகள். இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை கூடுதலாக கவரும் பொருட்டு ரிஸ்தாவை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது ஏத்தர். இது குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2024, 12:00 [IST]
English summary
Ather announced exchange program under its upgrade program
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+