8 ஆண்டுகள் வாரண்டி அறிவித்த இ-ஸ்கூட்டர் பிராண்டு.. ஆச்சரியம் என்னவென்றால் அது ஓலா அல்ல.. நம்பி வாங்கலாம்போல!

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) உள்ளது. இது கர்நாடகா மாநிலம் பெங்களூருவையே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிறுவனமே போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புதிய வாரண்டி திட்டத்தை தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. 'ஏத்தர் எய்ட்70' (Ather Eight70), எனும் வாரண்டி திட்டத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் 'பேட்டரி பேக்' (Battery Pack)-கிற்கான வாரண்டி திட்டம் ஆகும்.

8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீட்டருக்கான ஓர் வாரண்டி திட்டமே ஏத்தர் எய்ட்70 பிளான். அதாவது, 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிமீ தூர பயன்பாட்டிற்கு பின்னரும் 70 சதவீத செயல்திறனை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக்-இல் எதிர்பார்க்கலாம்.

Ather eight70 warranty plan launches

ஒருவேளை அதில் சற்றே சுணக்கம் இருக்கும் எனில் நிறுவனத்தின் ஏத்தர் எய்ட்70 திட்டத்தின்கீழ் அதற்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், இந்த வாரண்டி திட்டமானது 'ப்ரோ' (Pro) பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த சூப்பரான வாரண்டி திட்டத்தை மிகவும் குறைவான விலையிலேயே ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏத்தர் எனெர்ஜி முன் வந்திருக்கின்றது.

ரூ. 5 ஆயிரம் விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. சந்தையில் தற்போது மிகக் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக ஓலா எலெக்ட்ரிக்-கே இந்த பிராண்டிற்கு மிகப் பெரிய சாவாலாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் ஏத்தர் எனெர்ஜியின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே குறைவான விலையில் அதிக நம்பிக்கையை வழங்கக் கூடிய வாரண்டி திட்டத்தை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களையும் கவர முடியும் என நிறுவனம் நம்புகின்றது. நிறுவனம் ஏற்கனவே ப்ரோ பேக் உடன் சேர்த்து 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிமீட்டருக்கான வாரண்டியை வழங்கி வருகின்றது.

இந்த நிலையிலேயே கூடுதல் கட்டணத்தின்கீழ் கூடுதல் வாரண்டி காலத்தை வழங்க அது முன் வந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவில் ரிஸ்தா (Rizta) மற்றும் 450 ஆகிய இரண்டு சீரிஸ்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

450 சீரிஸ்-இல் ஏத்தர் 450எஸ் (450S), ஏத்தர் 450எக்ஸ் (450X) மற்றும் ஏத்தர் 450 அபெக்ஸ் (450 Apex) ஆகிய மூன்று தேர்வுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து, ரிஸ்தாவில் மூன்று விதமான தேர்வுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. 3.7 kWh மற்றும் 2.9 kWh ஆகியவையே அந்த பேட்டரி பேக் தேர்வுகள் ஆகும்.

இதில் 2.9 kWh பேட்டரி பேக்கை மட்டுமே இரண்டு விதமான ஆப்ஷன்களில் ஏத்தர் வழங்குகின்றது. இதில் ரிஸ்தாவே பிராண்டின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் 2.9 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட எஸ் எனும் தேர்வு 1.09 லட்ச ரூபாய்க்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், 7 அங்குல திரை, ஸ்மார்ட் ஈகோ சிஸ்டம் போன்ற சூப்பரான அம்சங்கள் பல இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கூடுதல் வாரண்டியின் வாயிலாக வாடிக்கையாளர்களின் மனதில் நம்பிக்கை விதைத்து, அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஏத்தர் எனெர்ஜி களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 14:51 [IST]
English summary
Ather eight70 warranty plan launches assurance for electric scooter owners
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+