தீபாவளி போனஸை எல்லாரும் இப்படிதான் செலவு பண்ணியிருக்காங்களா! மேட்-இன் தமிழ்நாடு வாகனத்திற்கு செம்ம வரவேற்பு!

ஒவ்வொரு ஆண்டுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டும் குறிப்பிட்ட சில நிறுவனங்களை தவிர பல நிறுவனங்கள் நல்ல விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்தவகையில், இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் விற்பனை புள்ளி விபரங்களை சமீபத்தில் வெளியிட்டது. இதன் வாயிலாக நிறுவனம் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை 2024 அக்டோபர் மாதத்தில் பெற்றிப்பது உறுதியாகி இருக்கின்றது.

இதுவரை எந்தவொரு மாதத்திலும் இல்லாத அளவிலேயே 2024 அக்டோபர் மாதத்தில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகி உள்ளன. சுமார் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே போன அக்டோபர் மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இதன் வாயிலாக இந்தியர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த போனஸ் பணத்தை அப்படியே வாகனங்களை வாங்க பயன்படுத்தி இருக்கின்றார்களோ என கேட்கச் செய்யும் வகையிலேயே இந்த தகவல் அமைந்திருக்கின்றது.

Ather energy achieved its highest-ever monthly sale

சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் விற்பனை வளர்ச்சியையே பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. 12,828 ஆயிரம் யூனிட்டுகளே அந்த மாதத்தில் விற்பனையாகின. இந்த நிலையிலேயே இதைவிட கூடுதலாக 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கடந்த அக்டோபரில் ஏத்தர் எலெக்ட்ரிக்-இன் தயாரிப்புகளை வாங்கி இருக்கின்றனர்.

இதன் வாயிலாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் டிமாண்ட் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது உறுதியாகி இருக்கின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ரிஸ்தா (Ather Riztha) மாறியிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 60 சதவீதத்திற்கும் மேல் ரிஸ்தாவே இருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.

ரிஸ்தா ஓர் குடும்பத்திற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) போன்ற ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வேலையை ரிஸ்தா மிக சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பது அக்டோபர் மாத விற்பனை வாயிலாக தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரண்டு விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். முழு சார்ஜில் 123 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய 2.9 kWh பேட்டரி பேக் மற்றும் 159 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய 3.7 kWh பேட்டரி பேக் ஆகியவையே அவை ஆகும். அதேநேரத்தில் ரிஸ்தாவை, ரிஸ்தா எஸ் (2.9 kWh), ரிஸ்தா இசட் (2.9 kWh) மற்றும் ரிஸ்தா இசட் (3.7 kWh) ஆகிய தேர்வுகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎம்எஸ் (PMS) மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். அதேவேளையில், இதனால் வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே ரிஸ்தா ஆகும்.

இது ஓர் குடும்பங்களுக்கான வாகனம் என்பதால் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றை இது தன்னுள் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில் பெரிய ஸ்டோரேஜ் வசதி, பெரிய இருக்கை அமைப்பு மற்றும் பெண்கள்-வயதானோர் சுலபமாக ஏறி-இறங்குவதற்கான அமைப்பு ஆகியவற்றையே ரிஸ்தாவில் ஏத்தர் எனெர்ஜி வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் விதமாக ஏத்தர் எனெர்ஜிக்கு கிடைத்திருக்கும் விற்பனை வரவேற்பு அமைந்திருக்கின்றது. இதேபோல், வரும் நாட்களிலும் அதற்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவும் என நம்பப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் ஆலை தமிழகத்தின் ஓசூரில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 5:00 [IST]
English summary
Ather energy achieved its highest ever monthly dispatches in october 2024
மேலும்... #ather energy #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+