கூகுள் உடன் கை கோர்த்த இந்திய எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தி நிறுவனம்.. எல்லாத்துலையும் முன்னோடியா இருக்காங்க!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் (Google) உடன் தற்போது கைகோர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக இந்த கை கோர்ப்பு என்று-தானே கேக்குறீங்க. கூகுள் மேப்ஸ் (Google Maps)இல் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் நிகழ்நேர நிலையை நேரலையாக வழங்கும் பொருட்டே இந்த இணைவை மேற்கொண்டு உள்ளது.

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மின்சார வாகன பயன்பாட்டாளர்களுக்காக ஏத்தர் கிரிட் (Ather Grid) எனும் பெயரில் மின்சார வாகனங்களை வேகமாக சார்ஜ் செய்யும் மையங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் நிகழ்நேர நிலையையே இனி கூகுள் மேப்ஸ் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும்.

Ather teams up with google

இதற்காகவே கூகுள் உடன் ஏத்தர் எனெர்ஜி தற்போது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் பயன்பாட்டில் இருக்கின்றதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள முடியும். மிக முக்கியமாக மையத்தை விசிட் செய்த உடன் சார்ஜ் செய்ய முடியுமா அல்லது சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டுமா என்பதையும் கூகுள் மேப்ஸ் வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மிகப் பெரிய அளவில் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். புதிதாக இன்ஸ்டால் செய்யப்படும் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்களும் கூகுள் மேப்ஸில் விரைவாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் ஏத்தர் எனெர்ஜியின் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையத்தை அணுகுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூகுள் மேப்-இல் சார்ஜிங் ஸ்டேஷனை தேடும் போது எல்இசிசிஎஸ் (Light Electric Combined Charging System) பிளக்கை சேர்ப்பதனால் முழுமையாக ஏத்தர் கிரிட்டின் அனைத்து சார்ஜிங் மையங்களின் நிலையையும் அறிந்துக் கொள்ள முடியும். ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இதுபோன்று தன்னுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, இந்த நிறுவனம் இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், முதல் நிறுவனமாக தொடுதிரை, ஆன்-போர்டு நேவிகேஷன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, ரிவர்ஸ் மோட் மற்றும் செல்போனுக்கான செயலி போன்ற வசதிகளை அது அறிமுகப்படுத்தியது.

இதுதவிர, கூகுள் மேப் நேவிகேஷன், அலெக்ஸா மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சேவைகளையும் அது வழங்கி வருகின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் ஏத்தர் நிறுவனம் 450 சீரிஸின்கீழ் 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ரிஸ்தா-வையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ரிஸ்தாவே இருக்கின்றது. அது ரூ. 1.09 லட்சத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், 450 சீரிஸில் 450எஸ் மாடலே விலை குறைவானதாகக் காட்சியளிக்கின்றது. அதன் ஆரம்ப விலை ரூ. 1.15 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனெர்ஜி மாறியிருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் அது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே கூகுள் உடனான இணைவு அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 11:48 [IST]
English summary
Ather energy and google partner to boost ev charging station visibility
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+