குடும்பம் குடும்பமா வந்து ஸ்கூட்டரை வாங்குறாங்க... ஏத்தர் நிறுவனத்துக்கு கையும் ஓடல, காலும் ஓடல!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் புதிய ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், இந்தியாவில் ஒரு நகரத்தில் ஒரே நாளில் சுமார் 500க்கும் அதிகமான ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக் செய்தவர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் எந்த நகரம் அது? என்பதை பற்றியும், ஏத்தர் எனர்ஜியின் புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏத்தர் எனர்ஜி, இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுள் ஒன்று. '450' என்கிற பெயரிலான செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவந்த ஏத்தர் எனர்ஜி அதன் முதல் ஃபேமலி ஸ்கூட்டராக ரிஸ்டாவை அறிமுகம் செய்தது. அப்போதே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன.

ather rizta

அதனை தொடர்ந்து, புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட்டன. இந்த நிலையில், ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துவரும் வரவேற்பை வெளிக்காட்டும் விதமாக, புனேவில் 'மீட் ரிஸ்டா' என்கிற நிகழ்ச்சிக்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, ஒரே நாளில் சுமார் 501 ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 501 ஸ்கூட்டர்கள் டெலிவிரி என்பதால், இந்த நிகழ்ச்சியில் ஸ்கூட்டரை புக் செய்தவர்கள், அவர்களது குடும்பத்தினர், எலக்ட்ரிக் வாகன பிரியர்கள், யூடியூப் சேனல்களை நடத்துபவர்கள் மற்றும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பணியாளர்கள் என கூட்டம் அலைமோதியது. மேலும், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏத்தர் எனர்ஜியின் எக்ஸ்பிரீயன்ஸ் மையங்களையும் பார்வையிட்டனர்.

ather delivers 501 rizta e-scooters

அங்கு, ஏத்தர் எனர்ஜியின் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். ஒரே இடத்தில், ஒரே நாளில் இத்தனை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் டெலிவிரி செய்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதன் மூலமாக, பெரிய அளவிலான சிங்கிள்-டே டெலிவிரி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடும்பத்தினரை மனதில் வைத்து, அவர்களது சவுகரியம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நன்கு நீளமான இருக்கை, 34 லிட்டர்கள் கொள்ளளவில் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை ரிஸ்டா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஓட்டுனர் கால்களை வைப்பதற்கு போதுமான இடவசதி உடன் ஃப்ளோர் போர்டு வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களாக ஸ்கிட் கண்ட்ரோல், ஸ்கூட்டர் கீழே விழுந்தாலும் சேதாரம் ஆகாத வகையில் வசதி, எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வாகனம் திருடு போவதை எச்சரிக்கும் வசதி போன்றவை ரிஸ்டாவில் இடம்பெறுகின்றன. 2.9kWh மற்றும் 3.7 kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ஏத்தர் ரிஸ்டா விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், எஸ் மற்றும் இசட் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இசட் வேரியண்ட்டை மட்டும் 2.9kWh அல்லது 3.7kWh பேட்டரி ஆப்ஷன் உடன் வாங்கலாம். ரிஸ்டா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1,10,156இல் இருந்து ரூ.1,45,157 வரையில் தற்சமயம் உள்ளன. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு தமிழ்நாட்டின் ஓசூரில் இரு தொழிற்சாலைகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே செயல்திறன்மிக்கவையாகவும், விலைமிக்கவையாகவும் மக்களால் பார்க்கப்பட்டு வந்தது. மக்களின் அந்த பார்வையை மாற்றி ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை குறைவானவை ஆகவும், ஃபேமலி ஸ்கூட்டராகவும் இருக்கும் என்பதை காட்டியது ரிஸ்டா ஆகும். அத்தகைய ஸ்கூட்டரை ஒரே நாளில் புனே என்கிற ஒரே நகரத்தில் நூற்றுக்கணக்கில் ஏத்தர் நிறுவனம் டெலிவிரி செய்திருப்பதில் இருந்து இந்த ஸ்கூட்டருக்கு அதிகரித்துவரும் வரவேற்பை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 22:08 [IST]
English summary
Ather energy celebrates meet rizta event in pune delivers 501 scooters in single day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+