இவங்களுக்கு லாபமே வேண்டாம் போலிருக்கே! 1 வருஷத்துக்கு இலவசமாக சார்ஜ் செஞ்சுக்கலாம்! ஏத்தர் எனெர்ஜி அறிவிப்பு!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் வருகின்ற விழாக் காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக 450எக்ஸ் (450X) மற்றும் 450 அபெக்ஸ் (450 Apex) ஆகியவை இருக்கின்றன. இரண்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும். இவற்றிற்கே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு சலுகைகளே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
பேட்டரி பேக்கிற்கு கூட்டப்பட்ட வாரண்டி, இலவசமாக ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையத்தை பயன்படுத்திக் கொள்ளும் திட்டம், விலை தள்ளுபடி, கேஷ்பேக் ஆஃபர் மற்றும் சிறப்பு பலன் உள்ளிட்டவற்றையே வருகின்ற விழாக் கால சலுகையாக ஏத்தர் எனெர்ஜி வழங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சிறப்பு சலுகைகளின் விபரம்: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ப்ரோ பேக் உடன் வாங்கும் வாடிக்கையாளர்களால் 15 ஆயிரம் ரூபாய்க்கான பலன்களை அனுபவிக்க முடியும். அதாவது, விழாக் கால சலுகையாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இந்த வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகள் பேட்டரிக்கான வாரண்டியை கூடுதல் கட்டணமின்றி வழங்க இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, ஓராண்டுக்கு இலவசமாக ஏத்தர் கிரிட் சார்ஜிங் (Ather Grid) மையத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்துக் கொள்ளவும் முடியும். இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் ஆகும். இத்துடனேயே ரூ. 5 ஆயிரம் டிஸ்கவுண்டையும் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுதவிர, ரூ. 10 ஆயிரம் கேஷ்பேக்கையும் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களால் மட்டுமே இதை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பே ரூ. 25 ஆயிரம் ஆகும்.
ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சிறப்பு சலுகைகளின் விபரம்: மேலே பார்த்த சிறப்பு சலுகைகளே இந்த மாடலுக்கும் வழங்கப்படுகின்றது. எந்த வித்தியாசமும் இரண்டிற்கும் இடையில் இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக ஏத்தர் 450 அபெக்ஸ் இருக்கின்றது.
இது ஓர் முழு சார்ஜில் 157 கிமீ ரேஞ்சை வழங்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இதில் ஆட்டோ ஹோல்டு, ஃபால் சேஃப், 7 அங்குல டிஎஃப்டி தொடுதிரை சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரை கூகுள் மேப் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், வாட்ஸ் ஆப் நோடிஃபிகேஷன் போன்ற முக்கிய தகவல்களையும் இதில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, டோவ் மற்றும் திருட்டை எச்சரிக்கை செய்யும் வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் ஏத்தர் எனெர்ஜி வழங்கி இருக்கின்றது. இவற்றுடன், மிக முக்கியமான வசதியாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேஜிக் டுவிஸ்ட் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகின்ற விழாக் காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது ஏத்தர் எனெர்ஜியும் விழா கால சலுகையை அறிவித்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெறும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








