ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது... வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறி ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் சமீபத்தில் ரிஸ்தா (Rizta) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அளவில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-விற்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி தயார் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளையே தற்போது நாட்டில் ஏத்தர் எனெர்ஜி தொடங்கி இருக்கின்றது.

டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பதை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தருண் மேத்தா-வும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும், ஸ்கூட்டர் டெலிவரி வழங்கப்படும் படங்களையும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முக்கிய நகரங்களிலேயே தற்போது டெலிவரி பணிகள் தொடங்கி உள்ளன.

Ather rizta family electric scooter deliveries begin

அகமதாபாத், புனே, டெல்லி, லக்னோ, ஆக்ரா, ஜெய்ப்பூர், நாக்பூர் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் டெலிவரி தொடங்கி உள்ளது. இ-ஸ்கூட்டர் விரைவில் மற்ற நகரங்களிலும் டெலிவரி கிடைக்கும் என்று மேத்தா குறிப்பிட்டுள்ளார். ரிஸ்தாவின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கியது.

இந்த நிலையிலேயே தற்போது டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.10 லட்சம் தொடங்கி ரூ. 1.45 லட்சம் வரையிலான விற்கப்படுகின்றது. தன்னுடைய முக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான 450எக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பல அம்சங்களை ஏத்தர் நிறுவனம் ரிஸ்தாவிலும் வழங்கி இருக்கின்றது.

ஆனால், 450எக்ஸ் மாடலைப் போல இது ஸ்போர்ட்டி லுக் மற்றும் ஸ்போர்டி பயன்பாட்டு அம்சம் கொண்ட வாகனம் அல்ல. இதனை முழுக்க முழுக்க ஃபேமிலி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே ஏத்தர் தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஹோண்டா ஆக்டிவாவை விட பெரிய இருக்கை மற்றும் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவை ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎம்எஸ் (PMS) மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். அதேவேளையில், இதனால் வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே ரிஸ்தா ஆகும்.

இதில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 2.9 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், அதிகபட்சமாக 159 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்ட 3.7 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் ரிஸ்தாவில் வழங்கப்படுகின்றது.

ஏத்தர் ரிஸ்தா இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரிஸ்தா எஸ் (2.9 kWh), ரிஸ்தா இசட் (2.9 kWh) மற்றும் ரிஸ்தா இசட் (3.7 kWh) ஆகியவையே அவை ஆகும். இதில், ரிஸ்தா எஸ் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999-க்கு விற்கப்படுகின்றது. இதுவே ரிஸ்தாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக, ரிஸ்தா இசட் 2.9 kWh பேட்டரி பேக் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999-க்கும், 3.7 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட ரிஸ்தா இசட் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 999-க்கும் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சௌகரியமான ரைடு அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது. பின் இருக்கையாளர்கள் சாய்ந்துக் கொண்டு பயணிக்க இது உதவும். இது ஓர் 'குஷன் பேட்' ஆகும். இத்துடன், 34 லிட்டர் மற்றும் 22 லிட்டர் என இரண்டு தனி தனி ஸ்டோரேஜ் அறைகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதில் ஒன்றில் ஆவணங்களையும், மற்றொன்றில் ஹெல்மெட் அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க ஃபேமிலிக்கான வாகனமாக ஏத்தர் ரிஸ்தா தயார் செய்யப்பட்டு இருப்பதால் இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள ஃபேமிலிகளைக் கவரும் பொருட்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் போன்ற குடும்பங்களுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களின் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் இந்த வேலையை அது பார்த்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2024, 22:04 [IST]
English summary
Ather energy rolls out rizta family electric scooter across key cities
மேலும்... #ather energy #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+