நாடே எதிர்பார்த்த இ-ஸ்கூட்டரின் உற்பத்தி பணி தொடக்கம்.. வெளிநாட்டுக்காரர்கள் எல்லாரும் பொறாமைப்பட போறாங்க!

ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 450 அபெக்ஸ் (Apex Special Edition) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்வப்நில் ஜெயின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய அளவில் இடத்தைப் பிடித்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் 450 அபெக்ஸ் (Ather 450 Apex)-ம் ஒன்றாகும். இந்த வாகனத்தை மிக சமீபத்திலேயே ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்தது. இதன் உற்பத்தி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ather 450 apex

நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்வப்நில் ஜெயினின் எக்ஸ் பதிவின் வாயிலாகவே இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஏத்தர் அபெக்ஸ் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதை முன்னிட்டே ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை நாட்டில் தொடங்கி இருக்கின்றது.

சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி நிறுவனம் அபெக்ஸ் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை வருகின்ற மார்ச் மாத்திலேயே தொடங்க இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. அபெக்ஸ் 450 ஓர் லிமிடெட் எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதாவது, மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த மாடலை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருக்கின்றது.

நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆவதை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாகவும் இதனை உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, அப்பட்டமாக உட்பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய பாடி பேனல்களையே இதில் ஏத்தர் எனெர்ஜி பயன்படுத்தி இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே 450 அபெக்ஸ் ரெடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீட்டராக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. மேலும், வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை இதனால் எட்டிவிட முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.

இது வழக்கமான ஏத்தர் 450எக்ஸ் மாடலைக் கட்டிலும் அதிக வேகம் ஆகும். இதன் ஆரம்ப நிலை ஆக்சலரேஷன் திறன் 13 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 7 kW பவரை வெளியேற்றும். 9.3 பிஎச்பி பவருக்கு இணையானதே இந்த திறன் ஆகும்.

மேலும், 26 என்எம் டார்க் வரை இது திறனை வெளியேற்றும். 450 எக்ஸ் மாடல் வெறும் 6.4 kW பவரை மட்டுமே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, புதிதாக 'வார்ப் பிளஸ்' (Warp+) எனும் மோடையும் இந்த ஸ்கூட்டரில் ஏத்தர் எனெர்ஜி வழங்கி இருக்கின்றது.

இத்துடன் புதியாக மேஜிக் ட்விஸ்ட் எனும் சிறப்பு வசதியையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் வழங்கி இருக்கின்றது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கிற்காக நெகட்டீவ் த்ரோட்டிலை உருவாக்குவதே இந்த மேஜிக் ட்விஸ்ட் அம்சத்தின் முக்கிய பணியாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தடையில்லா ரீஜென் பிரேக்கிங்கிற்காக த்ரோட்டில் எதிர்பக்கமாக 15 டிகிரிக்கு ட்விஸ்ட் செய்யப்படும்.

ஆகையால், மிக சிறந்த ஸ்பீடு மற்றும் மின்சார இழப்பு மீட்டமைப்பு ஆகியவற்றை இதன் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ரேஞ்ஜ் திறன் 157 கிலோ மீட்டர் ஆகும். இதற்காக 3.7 kWh பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்று ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கினாலும், ஒரு சில முக்கிய அம்சங்களை ஏத்தர் எனெர்ஜி வழங்க தவறிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் வழங்கப்படவில்லை. அதேவேளையில், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது ஸ்டாண்டர்டு அம்சம் ஆகும். இத்துடன், இருசக்கர வாகனத்தை வாங்குபவர்களுக்கு தலைக்கவசம் ஒன்றை வழங்கவும் ஏத்தர் எனெர்ஜி திட்டமிட்டு உள்ளது. இந்த ஹெல்மெட் ஸ்கூட்டரின் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏத்தர் 450 அபெக்ஸ் மல்டி கலர்களைக் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே 10 ஆம் ஆண்டை முன்னிட்டு 450 அபெக்ஸ் சிறப்பு பதிப்பை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு 1.89 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 14:38 [IST]
English summary
Ather energy starts 450 apex special edition production
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+