ஹெல்மெட் உள்ளேயே ஒருத்தருக்கொருத்தர் பேசிக்லாம்! ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்!
ஏத்தர் நிறுவனம் இன்று ஏத்தர் கம்யூனிட்டி டே என்ற நிகழ்ச்சியை கொண்டாடிய நிலையில், இந்த நிகழ்வில் தனது புதிய ஏத்தர் ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியதுடன் ஏத்தர் ஹாலோ என்ற ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹாலோ ஹெல்மெட் மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் ஏத்தர் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் அனைத்து செக்மெண்டில் உள்ள மக்களையும் கவர் செய்யும் விதமாக இன்று ஏத்தர் ரிஸ்ட்டா என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து ஹாலோ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெல்மெட்டை பொருத்தவரை ஒரு முழு ஃபேஸ் ஹெல்மெட்டாக இருக்கிறது. இதில் இன்டகரேட்டட் ஸ்மார்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் உள்ளே ஸ்பீக்கராக ஹார்மோன் கார்டன் நிறுவனத்தின் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாட்டு கேட்பது, போன் பேசுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும்.
இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ஆட்டோ வியர் டிடெக்ட் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹெல்மெட் சரியாக போடப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை தானாக கண்காணித்து எச்சரிக்கும் விதமாக இதன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹெல்மெட்டை வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்து கொள்ளலாம். ஹெல்மெட் உள்ளே ஓடும் மியூசிக் மற்றும் கால்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும்.

இது மட்டுமல்லாமல் ஏத்தர் நிறுவனம் என்ற தொழில்நுட்பத்தையும் இந்த ஹெல்மெட்டில் புகுத்தியுள்ளது. ரைடரும் பின்பக்கம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதற்காக இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹெல்மெட் உள்ளேயே மைக்கும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மைக் மூலம் கேட்கும் சத்தம் வேறு ஹெல்மெட் அணிந்திருப்பவருக்கு ஸ்பீக்கரில் கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏத்தர் நிறுவனம் இந்த ஹெல்மெட் உள்ளே ஹார்மோன் கார்டன் நிறுவனத்தின் ஸ்பீக்கரை பொருத்தியுள்ளதால் நல்ல தரமான ஆடியோ அவர்களுக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக வெளியில் உள்ள ஹாரன் சத்தம் உள்ளிட்ட சில முக்கியமான சத்தங்கள் ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பான ரைடிங் அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும்.

ஏத்தர் ஹாலோ ஹெல்மெட் ஸ்கூட்டருடன் எப்பொழுதும் இணைப்பில் இருக்கும் வகையில் சில தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக வயர்லெஸ் முறையில் இந்த ஹெல்மெட்டை சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம் இதில் உட்பகுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹெல்மெட்டை கழட்டி ஸ்கூட்டர் உள்ளே வைத்தால் தானாக சார்ஜ் ஏறிவிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொள்ளும் போது ஆட்டோமேட்டிக்காக டெலிட் செய்யும் தொழில்நுட்பமும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஹெல்மெட் ஸ்கூட்டர் மற்றும் உங்களது ஸ்மார்ட்போன் ஆகிய மூன்றும் கழட்டிவிட்டியிலேயே இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் நிறுவனம் ஹாலோ பிட் எனப்படும் ஏத்தர் ஹாப் ஃபேஸ்ல் ஹெல்மெட் உடன் இணைக்கும் மாடுலையும் உருவாக்கி உள்ளது. இதை அனைத்து விதமான ஹாலோ ஹெல்மெட் உடன் இணைக்க முடியும்.

இந்த ஹெல்மெட்டின் விலையை பொருத்தவரை ஏத்தர் நிறுவனம் ஹாலோ ஹெல்மெட்டிற்கு ரூபாய் 12,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹாலோ பிட்டிற்க்கு ரூபாய் 4999 என்ன விலை நிர்ணயம் செய்துள்ளது. ஏத்தர் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விரைவில் இந்த ஹெல்மெட் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஹெல்மெட் எல்லாம் ஐஎஸ்ஐ மற்றும் டிஓடி தரச்சான்று சென்ற ஹெல்மெட்டாக உருவாக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த ஹாலோ ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இப்படியான அக்சஸரீஸ் வாங்க வெளி நிறுவனத்தை நாட வேண்டியது இருந்தது. தற்போது ஏத்தர் நிறுவனமே இதை வழங்கி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications









