ஆக்டிவாவை எல்லாரும் மறக்கப்போவது கன்ஃபார்ம்.. இந்த இ-ஸ்கூட்டர் வருகையால் நிறைய பேருக்கு சிக்கல் ஏற்படபோகுது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric TwoWheeler) உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இப்போதைய நிலவரப்படி 450எக்ஸ், 450எஸ் மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே ஏத்தர் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே நான்காவதாக ஓர் புதுமுக தயாரிப்பையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தின் செயல்பாடுகளும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. அந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் இப்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போன்றும் இருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ather rizta details revealed

குடும்பங்களுக்கான தயாரிப்பாகவே அது இருக்கும். ஆமாங்க ரிஸ்தா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புதிய தகவல்களே தற்போது வெளியாகி இருக்கின்றது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளநிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் இருக்கைக்கு அடியில் இருக்கும் இட வசதி பற்றிய தகவல்களே வெளியிடப்பட்டு இருக்கின்றது.

ஒன்றிற்கு இரண்டு ஸ்டோரேஜ் அறை இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். சிறிய ஒன்றில் செல்போன், பர்ஸ் மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்ள முடியும். பெரிய ஒன்றில் வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது ஹெல்மெட்டை வைத்துக் கொள்ளலாம்.

Ather rizta outlook

அந்த அளவிற்கு பெரிய ஸ்டோரேஜே ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுநாள் வரை மறைப்புகளுடனும், அங்கம்-அங்கமாக மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் தரிசனத்தை வழங்கி வருகின்றது. அந்தவகையில், இப்போதும் மறைப்புகளுடனேயே அந்த ஸ்கூட்டர் காட்சி தந்திருக்கின்றது. இருப்பினும், இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற ஏத்தர் ஸ்கூட்டர்களிடம் இருந்து பல நிலைகளில் ரிஸ்தா மாறுபட்டத் தோற்றத்தைக் கொண்டிருப்பது தெரிய வருகின்றது.

குறிப்பாக, உருவ தோற்றம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றில் தனித்துவமானதாக ரிஸ்தா காட்சியளிக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் மூன்று ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் (450எக்ஸ், 450எஸ் மற்றும் 450 அபெக்ஸ்) ஒரே மாதிரியான ஸ்டைலைக் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவை ஸ்போர்ட்டியான லுக் மற்றும் வசதிகளைத் தாங்கியதாக இருக்கின்றன.

Ather rizta storage

ஆனால், ரிஸ்தா முழுக்க முழுக்க குடும்ப பயன்பாட்டிற்கான வாகனம் ஆகும். ஆக்டிவாவைவிட பெரிய இருக்கை (மூன்று பேர்கூட தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம்), பெரிய ஸ்டோரேஜ், தாராளமான கால் வைக்கும் இடம், எளிதில் ஏறி-இறங்குவதற்கு ஏற்ற உயரம் ஆகிய வசதிகளையே ரிஸ்தா கொண்டிருக்கின்றது. இதை நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே புதிய படமாக ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, ஏத்தர் ரிஸ்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருப்பதாகக் கூறி சில படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவை ஏப்ரல் முட்டாள் தினத்தை முன்னிட்டு அனைவரையும் ஏமாற்ற வேண்டி இணையவாசிகளால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் வருகின்ற 6ஆம் தேதி அன்றே ஏத்தர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. அன்றே முழுமையான படங்கள் வெளியிடப்பட இருக்கின்றது. ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை மின்சார ஸ்கூட்டர் மாடல்களுக்கு மட்டுமல்ல சில பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, இந்தியர்களின் பிரியமான ஸ்கூட்டர் மாடல்களான ஹோண்டா ஆக்டிவாவிற்கு இதன் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்த இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஆக்டிவாவில் இருப்பதை விட பெரிய அளவுள்ள இருக்கை ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவாவிற்கு மட்டுமல்ல டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏத்தர் 450எக்ஸ் டிசைன் தாத்பரியங்கள் லேசாக ரிஸ்தாவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், லைட் செட்-அப், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி செட்-அப் ஆகியவற்றிலும் ரிஸ்தா, அதன் மூதாதையரான 450எக்ஸ் உடன் ஒத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ரிஸ்தாவை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஏத்தர் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. சமீபத்திலேயே இதற்கான புக்கிங் பணிகளையும் அது தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 17:03 [IST]
English summary
Ather revealed new details about rizta electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X