இந்தியாவே எதிர்பார்த்த ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தேதி வெளியானது! இப்பவே நோட் பண்ணிக்கோங்க!

ஏத்தர் நிறுவனம் குடும்பங்கள் பயணிக்கும் வகையிலான ரிஸ்ட்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் அறிமுகம் ஆகும்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமாகி விற்பனையாகி வந்த நிலையில், இரண்டாவது பேட்டரி ஆப்ஷன் டெலிவரி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் பயணிக்கும் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கின்றன. 2.9 கிலோவாட்ஹவர் பேட்டரி ஆப்ஷன் மற்றும் 3.7 கிலோவாட்ஹவர் பேட்டரி ஆப்ஷன் இருக்கிறது.

ather rizta 3 7 kwh delivery date

இதில் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. 3.7 கிலோ வாட் ஹவர் கொண்ட பேட்டரி ஆப்ஷனின் டெலிவரி குறித்த தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. பலர் இது குறித்த நீண்ட எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் இந்த 3.7 கிலோவாட்ஹவர் பேட்டரி ஆப்ஷன் கொண்ட ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி இந்த மாத இறுதிக்குள் துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ஏத்தர் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3.7 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் மூலம் இந்த ஸ்கூட்டர் 159 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல் வேர்ல்டில் எப்படியும் 125 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கலாம்.

ather rizta 3 7 kwh delivery date

இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்காக 700 வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 0 முதல் 80 சதவீத சார்ஜை ஏற்ற 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. 100% ஏற்ற 6 மணி நேரம் 10 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இந்த வாகனத்தை ஏத்தர் கிரிட் மூலம் சார்ஜ் செய்தால் 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 15 கிலோமீட்டர் பயணிக்கும் அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும். இதன் பேட்டரி பேக் ஐபி 67 தூசு மற்றும் தண்ணீர் ரெசிஸ்டென்ஸ் கொண்டது.

இந்த ஏத்தர் ரிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் 450 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே எலெக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 4.3 கிலோ வாட் பவரையும் 22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ather rizta 3 7 kwh delivery date

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஐபி66-படி தூசு மற்றும் தண்ணீர் ரெசிஸ்டென்ஸ் கொண்ட வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்திலும் தாராளமாக இந்த ஸ்கூட்டரை எடுத்துச் செல்ல முடியும்.

ஸ்கூட்டரில் மேஜிக் ட்விஸ்ட் என்ற தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி திடீரென அவசரமாக பிரேக் பிடிக்க வேண்டும் என்றால் ஆக்ஸிலேட்டரை ரிவர்சில் சுத்தினால் வாகனம் இன்னும் வேகமாக பிரேக் பிடித்து நிற்கும். இதனால் இந்த வாகனத்தின் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த வாகனத்தில் ஸ்கிட் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா எஸ் வேரியன்டில் டீப்வியூ எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இதே சிஸ்டம் தான் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் இருக்கிறது. இசட் வேரியண்டில் டிஎஃப்டி ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கூகுள் மேப் நேவிகேஷன் இருக்கிறது. எஸ் வேரியண்டில் சாதாரண சீட்டு தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்பக்க பேக்ரெஸ்ட் இல்லை. ஆனால் இசட் வேரியன்டில் பிரீமியம் சீட்டுடன் சேர்த்து பின்பக்கம் பேக்ரெஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.

ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமான பின்பு இந்தியாவில் ஸ்கூட்டர்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் பலர் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக இப்படியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் அதிக தூரம் பயணிக்கும் பயன்பாடு கொண்டவர்களாக இருந்தால், அதிக பேட்டரி பவர் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வு செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த வாகனம் தற்போது டெலிவரி துவங்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகமாகி வரும் நிலையில், ஏத்தர் நிறுவனம் தனக்கான ஒரு பெயரை வைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பெர்ஃபார்மென்ஸ் ரீதியிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து நல்ல பெயரை பெற்றுள்ள நிலையில், குடும்பங்களை கவர்வதற்கான இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 12:00 [IST]
English summary
Ather rizta 3 7 kwh delivery date starts july 2024
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X