40அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட இ-ஸ்கூட்டரின் பேட்டரி! மக்களை ஈர்க்க இப்படி ஒரு விபரீத பரீட்சையா!! வீடியோ!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் ஃபேமிலி பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய திட்டமிட்டு இருக்கின்றது ஏத்தர் எனெர்ஜி.

இந்த நிலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது ஏத்தர் எனெர்ஜி நிறுவனம். இதன் அடிப்படையில் ரிஸ்தா பற்றிய சுவராஷ்ய தகவல்களை அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் ரிஸ்தாவில் பயன்படுத்தப்பட உள்ள இருக்கையை பற்றியும் மற்றும் அதன் ஸ்டோரேஜ் அளவு பற்றிய தகவலையும் ஏத்தர் எனெர்ஜி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி பேக்கின் சிறப்புகள் பற்றிய விபரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. ரிஸ்தாவில் பயன்படுத்தப்பட இருக்கும் பேட்டரி பேக் எத்தகைய நீடித்து உழைக்கும் திறன் கொண்டது மற்றும் உறுதியானது என்பதையே வெளிக்காட்டியிருக்கின்றது ஏத்தர்.
இதன் அடிப்படையில் ஓர் வீடியோ பதிவை அது வெளியிட்டு இருக்கின்றது. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பேட்டரி பேக்கின் உறுதித் தன்மையை ஆய்வுச் செய்யும் வீடியோவே அது ஆகும். இத்தனை அடி உயரத்தில் இருந்து கீழே விடப்பட்டும் அந்த பேட்டரி பேக்கிற்கு எதுவுமே ஆகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அந்த பேட்டரி பேக் பாதிப்படையாதது மட்டுமல்ல மீண்டும் செயல்படும் வகையிலேயே அது இருந்திருக்கின்றது. இது ஆச்சரியத்தின் உச்சிக்கே பலரை எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதன் வாயிலாக ஏத்தர் ரிஸ்தா வெறும் குடும்பங்களுக்கான வழக்கமான ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மட்டுமில்லாமல் அதிக பாதுகாப்பானதாகவும் இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.4 kW (7.24 பிஎச்பி) மற்றும் 22 என்எம் டார்க் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்துடன், 2.9 kWh பேட்டரி பேக்கே ரிஸ்தாவில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கையே நிறுவனம் தற்போது சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றது.
இதன் வாயிலாகவே ரிஸ்தாவில் அப்பேட்டரி பேக் பயன்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கும் இருக்கை ஹோண்டா ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இருக்கையைவிட பெரியதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு இருக்கைகளையும் அருகருகில் வைத்தபடி ஒப்பீடு செய்யும் படத்தை சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், ஸ்டோரேஜ் விஷயத்திலும் இந்த ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெஸ்ட்டானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்ராக ரிவர் இன்டீ இருக்கின்றது. இதன் ஸ்டோரேஜ் அளவு 40 லிட்டருக்கும் அதிகம் ஆகும். இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் ரிஸ்தா இருக்கும் என நிறுவனம் முந்தைய பதிவுகள் கூறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்ப பயன்பாட்டிற்கான இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த பிரிவை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தற்போது ரிஸ்தாவை களமிறக்கும் முயற்சியில் ஏத்தர் களமிறங்கி இருக்கின்றது. மேலும், அது வெளியிட்டு வரும் தகவல்களின் வாயிலாக ரிஸ்தா முழுக்க முழுக்க குடும்ப பயன்பாட்டிற்கான வாகனமாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









