இவங்க சொல்றத பாத்தா 3 பேரு போனாலும் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கும் போலையே.. அவ்ளோ பெருசா இந்த இ-ஸ்கூட்டர்!
ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் வெகு விரைவில் ரிஸ்தா (Rizta) எனும் ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது குடும்பங்களுக்கான வாகனம்தான் என்பதை உறுதி செய்யக் கூடிய தகவல்கள் சமீப சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையிலேயே தற்போது ஓர் புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் மிகப் பெரிய இருக்கையுடன் விற்பனைக்கு வர இருப்பதை நிறுவனத்தின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்திய நிலையில், தற்போது அது மிகப் பெரிய ஸ்டோரேஜைக் கொண்டதாகவும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸ் 43 லிட்டருக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி மிகப் பெரிய ஸ்டோரேஜ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ரிவர் இன்டீ இருக்கின்றது. இதைவிட அதிக ஸ்டோரேஜ் வசதியையே ரிஸ்தா கொண்டிருக்கும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஏத்தர் ரிஸ்தா ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் என்பது மிகவும் ஸ்ட்ராங்காக தெரிய வந்து உள்ளது. இந்த அளவு அதிக ஸ்டோரேஜை வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பெரிய ஸ்டோரேஜ் வசதி வீட்டுக்கு தேவையான பொருட்களை அதிகளவில் வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இது ஃபேமிலிக்கான வாகனம்தான் என்பதை இதன் வாயிலாக மீண்டும் கூடுதலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதன் வருகை டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.
இதுதவிர, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கும் ஏத்தர் ரிஸ்தா போட்டியாக இருக்கப் போகின்றது. இதற்காகவே பெரிய இருக்கை அமைப்பை வழங்கி இருக்கின்றது, ஏத்தர். ஆமாங்க, ஹோண்டா ஆக்டிவாவில் இருப்பதைவிட பெரிய இருக்கையே ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் அளவை வைத்து பார்க்கையில் மூன்று பேர்கூட அதில் அமர்ந்து பயணிக்க முடியும் என கூறும் அளவிற்கு இருக்கின்றது.
ஆனால், இந்தியாவில் மூவர் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்க அனுமதியில்லை. அதேவேளையில், நம்ம ஊரில் கணவன், மனைவி மற்றும் சிறு வயது பிள்ளை என மூவராக பயணிப்பவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இவ்வாறு பயணம் செய்வோருக்கு ஏற்ற தயாரிப்பாக ஏத்தர் ரிஸ்தா இருக்கப்போகின்றது.
ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ரிஸ்தா என்ன ரேஞ்ஜை தரும்? எவ்வளவு வேகத்தில் பயணிக்கும்? மற்றும் என்ன மாதிரியான சிறப்பம்சங்களை அது கொண்டிருக்கும்? என்பது போன்ற முக்கிய விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, புக்கிங் மற்றும் டெலிவரி நாள் பற்றிய விபரங்களையும் ஏத்தர் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இந்த வாகனத்தை ஸ்போர்ட்டி மற்றும் ஃபேமிலி பயன்பாடு என இரண்டிற்குமான வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே மிக அதிக சிறப்பம்சங்களுடன் ரிஸ்தா விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆகையால், போட்டி நிறுவனங்கள் சற்றே கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, ரிஸ்தாவின் வருகை வெகுவிரைவில் ஓலாவிற்கும் மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஏத்தர் நிறுவனம் 450எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் 450 அபெக்ஸ் சிறப்பு பதிப்பு ஆகும். குறுகிய காலத்திற்கு மட்டுமே நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








