டவுட்டே இல்ல... மார்க்கெட்டில் ஹிட்டு தான்!! ஏத்தரின் தரமான புது தயாரிப்பு - அருகில் பார்க்க எப்படி இருக்கு?
ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta), ஏத்தர் எனர்ஜியின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர். பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் '450' என்கிற அதன் பெர்ஃபார்மன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்து சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிஸ்டா ஆகும்.
பெங்களூரில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ஏத்தர் எனர்ஜியின் கம்யூனிட்டி டே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சியின் 2வது எடிசனான இதில் ஏத்தர் நிறுவனம் தனது புத்தம் புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொது உலகிற்கு காட்டி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில் நாங்களும் கலந்துக் கொண்டோம்.
நிகழ்ச்சியில் நிறுத்தப்பட்டு இருந்த ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மிக நெருக்கமாக தொட்டு பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் காட்சிப் படுத்தியவற்றை மேலே உள்ள வீடியோவில் காணலாம். மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்ற ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகத்துக்கு முன்னதாக பல்வேறு சோதனைகளில் ஏத்தர் உட்படுத்தியது.

ரூ.1.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய ஏத்தர் ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ், இசட் மற்றும் இசட் லாங் ரேஞ்ச் என 3 விதமான வேரியண்ட்களில் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். ரிஸ்டாவின் முக்கிய சிறப்பம்சம், அதன் பெரிய அண்டர்-சீட் ஸ்டோரேஜ் ஆகும். சுமார் 34 லிட்டர்கள் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








