எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). ஓலா எஸ்1 (Ola S1), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக, ஏத்தர் ரிஸ்டா விற்பனைக்கு வரவுள்ளது.
அனேகமாக ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஏப்ரல் 6ம் தேதி (April 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Pre-Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஏத்தர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) மூலம், ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏத்தர் நிறுவனம் இதை ஃபேம்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Family Electric Scooter) என வர்ணிக்கிறது. எனவே இது குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அதற்கு ஏற்ப பெரிய இருக்கை வழங்கப்படவுள்ளது. அத்துடன் இந்த இருக்கைக்கு அடியில் பொருட்களை வைத்து கொள்ள ஏதுவாக தாராளமான இடவசதியையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 2.9 kWh பேட்டரி ஒன்றாக இருக்கலாம். இதன் ரேஞ்ச் (Range) 115 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர 3.7 kWh பேட்டரி ஆப்ஷனும், ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் 150 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம்.
ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது. இந்த வரிசையில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அதிநவீன வசதிகளுடன்தான் விற்பனைக்கு வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை ஏத்தர் நிறுவனம் வரும் ஏப்ரல் 6ம் தேதி வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிநவீனமானவையாக உள்ளன. இந்த அதிநவீன வசதிகளுடன், சௌகரியமாக பயணம் செய்வதற்கு ஏற்ற பெரிய இருக்கையும் கலந்த கலவையாக ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.
எனவே சௌகரியமாக பயணம் செய்யும் வகையில் பிரீமியமான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. அத்துடன் ஏத்தர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு, ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிய அளவில் உதவி செய்யும் எனவும் நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








