குறித்து வெச்சிக்கோங்க... ஓலாவை எல்லாம் ஓரங்கட்ட போகிற இ-ஸ்கூட்டர் இதுதான்!! உருவாக்குவது யார் தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அடுத்ததாக புதிய ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ரிஸ்டா இ-ஸ்கூட்டரின் படம் ஒன்று அறிமுகத்துக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்பை படத்தின் மூலம் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் செயல்திறன்மிக்க பெர்ஃபார்மன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பவர்புல் மோட்டாருக்காகவே நிறைய பேர் வாங்கினர். 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு விதமான வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டதே தவிர்த்து, நீண்ட வருடங்களாக 450 மாடலை தாண்டி வேறெந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஏத்தர் நிறுவனம் யோசிக்கவில்லை.

ather rizta scooter image leaked

ஆனால், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மார்க்கெட்டை பெரியதாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி, அதிகமான விலையினால் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வாங்குகின்றனர். ஆதலால், ஓலா எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப் போன்று பட்ஜெட் விலையிலான ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்க்கெட்டில் களமிறக்க வேண்டிய கட்டாயம் ஏத்தர் எனர்ஜிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரிஸ்டா என்கிற பெயரில் புதியதொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் வடிவமைக்க ஆரம்பித்தது. குறைவான விலை மட்டுமின்றி, ஏத்தர் 450 ஸ்கூட்டரை காட்டிலும் அளவில் நன்கு பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏத்தர் ரிஸ்டாவின் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஏப்ரல் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏத்தர் எனர்ஜி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

ather rizta scooter image leaked

புதிய ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டருக்கான ப்ரீ-புக்கிங்ஸும் ரூ.999 என்கிற டோக்கன் தொகையில் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்த நிலையில், ரிஸ்டா ஸ்கூட்டரின் புதியதொரு புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. விளம்பர வீடியோவின் படப்பிடிப்புக்காக ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரை கொண்டு சென்றபோது ரகசியமாக எடுக்கப்பட்டதாக இந்த போட்டோ உள்ளது.

இந்த ஸ்பை படத்தில் கிரே நிறத்திலான ரிஸ்டா ஸ்கூட்டரை காணலாம். ஹெல்மெட் அணிந்தப்படி முன்னால் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, அவருக்கு பின்னால் ஒருவர் கேமராவை பிடித்தப்படி அமர்ந்துள்ளார். கேமராவின் லென்ஸ் ஸ்கூட்டரை ஓட்டுபவரையும், ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரையும் நோக்கி உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, விளம்பரத்துக்கான வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு கொண்டிருந்த போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ather rizta scooter image leaked

புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நன்கு நீளமானது என கூறப்பட்டுவரும் நிலையில், ரிஸ்டாவின் நீளத்தையும், ரைடர் கால் வைத்துக் கொள்வதற்கான விசாலமான இடவசதியையும் தற்போது லீக்காகி உள்ள படத்தில் தெளிவாக காண முடிகிறது. பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் பெரிய கேமராவை சுமந்தப்படி சென்றாலும், அவருக்கு பின்னால் இன்னும் கூடுதலாக இடம் இருப்பதை காணலாம்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரை போன்று கூர்மையான லைன்கள் எதுவும் இந்த ஸ்கூட்டரில் இல்லை. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கிடைமட்ட வடிவில் எல்இடி டெயில்லைட், பெரிய ஃப்ளோர் போர்டு மற்றும் சிங்கிள் பீஸாக இருக்கை உள்ளிட்ட விபரங்கள் நமக்கு தெரியவந்தாலும், ரிஸ்டாவின் விலை எவ்வளவாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு பிறகே தெரியவரும். ஏத்தர் ரிஸ்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.1.15 லட்சம் - ரூ.1.20 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

ather rizta scooter image leaked

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் ஏற்கனவே இதற்குமுன் சிலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்களில் ஸ்கூட்டர் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள படத்தில் ரிஸ்டாவின் தோற்றத்தை தெள்ள தெளிவாக காண முடிகிறது.

Source

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 23:57 [IST]
English summary
Ather rizta electric scooter image leaked check new details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X