இந்தியாவே காத்து கிடக்கும் 'ஃபேம்லி ஸ்கூட்டர்' இவ்ளோ சீக்கிரம் வரப்போகுதா! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் (Ather). இந்த நிறுவனத்தின் 'கம்யூனிட்டி டே' (Community Day) நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 6ம் தேதி (April 6) நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) நகரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.

Ather Rizta Electric Scooter

'ஃபேம்லி ஸ்கூட்டர்' (Family Scooter) என வர்ணிக்கப்படும் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர்கள் (Teasers) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 6ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அதை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. உருவம் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி, இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் முற்றிலும் புதியதாக இருக்கும்.

Ather Rizta Electric Scooter Seat

அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், உருவத்தில் பெரியதாகவும், தாராளமான இடவசதி உள்ளதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இது 'ஃபேம்லி ஸ்கூட்டர்' என வர்ணிக்கப்படுகிறது. ஏத்தர் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை போல், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது.

இதில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம். ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி (Battery), மோட்டார் (Motor), ரேஞ்ச் (Range) மற்றும் வேகம் (Speed) உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை (Price) அனேகமாக 1.25 லட்ச ரூபாய் முதல் 1.35 லட்ச ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எஸ் (TVS iQube S) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் இது போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ஒரு பீரிமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என திட்டமிட்டு கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு காத்திருக்கலாம். இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வந்து விடும் என்பதால், இது பற்றி பரிசீலனை செய்வது சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 20:24 [IST]
English summary
Ather rizta electric scooter unveil date april 6 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+