ஒரு தடவை சார்ஜ் போட்டா இவ்வளவு ரேஞ்ச் தருமா? ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீடியோ ரிவியூ!
ஏத்தர் நிறுவனம் தனது ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இது குடும்பங்களை மையப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஆகும். இந்நிறுவனம் ஏற்கனவே பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 450 சீரியஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனை செய்து வரும் நிலையில், குடும்ப வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் இந்த ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்து விமர்சனம் செய்ய எங்கள் டிரைவர் குழுவை தொடர்பு கொண்டு அழைத்து இருந்தது. அதன் பேரில் எங்கள் குழுவினரும் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க சென்றிருந்தோம். அதன்படி இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் இந்த ஸ்கூட்டரில் உள்ள வசதிகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வீடியோவாக உங்களுக்கு வழங்கி உள்ளோம்.
இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இரண்டு விதமான வேரியன்ட்களிலும் விற்பனைக்கு வருகிறது. இதில் ஏத்த லிஸ்ட் என்ற வேரியன்ட் மற்றும் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் விற்பனைக்கு வருகிறது. குறைந்த பேட்டரியில் இரண்டு வேரியன்ட்டும் அதிக பேட்டரி திறன் கொண்ட ஆப்ஷனில் ஏத்தர் ரிஸ்டா என்ற வேரியண்ட் மட்டுமே விற்பனையாகி வருகிறது.

இந்த ஸ்கூட்டரின் சிறப்பு அம்சமே அதிக இட வசதி தான் இந்த ஸ்கூட்டரின் சீட் பகுதி பெரிதாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்கள். அதே போல இந்த ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் வசதியும் அதிக அளவில் இருக்கும்படி வடிவமைத்துள்ளார்கள். இதனால் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வரும்போது நாம் வாங்கிச் செல்லும் பெரும்பாலான பொருட்களை எடுத்து வர முடியும்.


Click it and Unblock the Notifications








