ஆக்டிவாவவிட பெரிய சீட் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது? இந்த நாளுக்காகதான் எல்லாரும் வெயிட்டிங்
ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது நிறுவனத்தின் குடும்பங்களுக்கான மின்சார ஸ்கூட்டர் மாடல் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த புதுமுகத்தின் வருகையை ஏத்தர் நிறுவனம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் கம்யூனிட்டி தின (Community Day)-த்தைக் கொண்டாட இருக்கின்றது. அன்றே இந்தியாவில் ஃபேமிலிகளுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனெர்ஜி மாறியிருக்கின்றது.

ஆனால், இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி முழுக்க முழுக்க இளம் தலைமுறையினர்களை மட்டுமே குறி வைத்து ஸ்போர்டி வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவிலும் அதன் கால் தடத்தை பதிக்கும் முயற்சியில் களமிறங்கியது.
இதன் அடிப்படையிலேயே ரிஸ்தா-வை அது தயார் செய்திருக்கின்றது. நம் நாட்டில் ஃபேமிலிகளுக்கான வாகனங்களுக்கான நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) உள்ளது. இதற்கு இந்தியாவில் அதிகம் வரவேற்புக் கிடைப்பதற்கு இருக்கும் முக்கிய காரணங்களில், அது ஓர் ஃபேமிலிக்கான இரண்டு சக்கர வாகனம் என்பதும் ஒன்றாகும்.

இதனால்தான் இந்த பிரிவை மையப்படுத்தி ஏத்தர் எனெர்ஜி, ரிஸ்தாவை களமிறக்குகின்றது. இதன் வருகையால் மிகப் பெரிய போட்டி சூழல் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக இதன் வருகை டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 மற்றும் பஜாஜ் சேத்தக் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டி உருவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு மட்டுமல்ல ஹோண்டா ஆக்டிவா போன்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இதன் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது. இதற்கு உதாரணமாக ஏத்தர் ரிஸ்தாவின் இருக்கை அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரிய இருக்கையையே, அதாவது, ஆக்டிவாவைவிட அளவில் பெரிய இருக்கையுடனேயே ரிஸ்தா விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது.
இதுதவிர, பெரிய கால் வைக்கும் இடம், அதிக ரேஞ்ஜ் திறன் மற்றும் போதுமான அளவு வேகம் உள்ளிட்ட சிறப்புகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், இதன் தோற்றமும் ஏத்தர் 450எக்ஸ் இல் இருந்து பலமடங்கு மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது.
இதை வைத்தே இது ஓர் ஃபேமிலிக்கான எலெக்ட்ரிக் டூ-வீலர் என்பது உறுதியாக தெரிகின்றது. அதேவேளையில், தொழில்நுட்ப வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக மிக அதிகமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.0 அங்குல டீப் வியூ வசதிக் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டிஸ்க் பிரேக் மற்றும் 12 அங்குல வீல்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர, செல்போன் இணைப்பு வசதியும் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த வாகனத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏப்ரல் 6 அன்றே அது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
ஆகையால், அந்த நாளுக்காக இந்திய மின்சார இரண்டுசக்கர வாகன காதலர்கள் பலர் வெறிக்கொண்டு காத்திருக்க தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, விலை, புக்கிங் மற்றும் டெலிவரி நாள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்களும் அன்றைய தினத்திலேயே ஏத்தர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ஜ் திறன் மற்றும் வேகம் பற்றிய தகவல்களையும் அந்த நிறுவனம் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்றே வெளியிட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே குடும்பங்களின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் பொருட்டு ஏத்தர், அதன் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








