இந்தியாவே இந்த தமிழ்நாட்டு தயாரிப்புக்கு தான் வெயிட்டிங்! ரிஸ்டாவின் தயாரிப்பை துவங்கிய ஏத்தர்!

ஏத்தர் நிறுவனம் தனது ரிஸ்டா என்ற குடும்பத்துடன் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் ரூபாய் 999 முன்பணம் செலுத்தி இந்த ஸ்கூட்டரை புக் செய்து வருகிறார்கள். இந்த ஸ்கூட்டரின் டெலிவரிக்காக அதன் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது ஏத்தர் நிறுவனம் இந்த ஸ்கூட்டர் குறித்த சில முக்கிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் 450 சீரியஸில் வரிசையாக வாகனங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது குடும்பங்களுடன் பயணிக்கும் வகையில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏத்தர் ரிஸ்டா என்ற ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது இது பெரிய சீட்டுகள் அதிக ஸ்டோரேஜ் வசதி கொண்ட நல்ல பிராக்டிகல் அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

ather rizta production begins

ஏத்தர் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை தற்போது மூன்று விதமான வேரியண்ட்களிலும் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்தியாவில் முழுவதும் இருந்து ரூபாய் 999 முன்பனமாக செலுத்தி பலர் இந்த ஸ்கூட்டரை புக் செய்து வருகிறார்கள்.

இந்த ஸ்கூட்டரின் டெலிவரிக்காக ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இந்நிறுவனம் இந்த ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான தயாரிப்பு துவங்கி விட்டதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தயாரிப்பு லைனில் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டரின் புகைப்படத்தை வெளியிட்டு அவர் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார். இந்நிறுவனம் ஓசூரில் நடத்திவரும் ஆலையில் தான் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏத்தர் நிறுவனத்தின் 450எஸ், 450எக்ஸ், 450 அப்பெக்ஸ், ஆகிய ஸ்கூட்டர்கள் எல்லாம் மார்க்கெட்டில் ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகி வருகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் களமிறங்கிய புதிய மாடல் ஸ்கூட்டராக இருக்கிறது. இது இன்னும் போட்டியை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் உள்ள ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய ஸ்கூட்டர்களை விரும்பும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது ரூ1.10 லட்சம் முதல் ரூ1.46 லட்சம் என்ற விலையில் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை பெற தகுதியான ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9 கிலோ டவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 15 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு ஆப்ஷனாக 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருக்கிறது. இது 125 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறனை பொறுத்தவரை 0-40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏகப்பட்ட நபர்கள் காத்து வாங்க காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்கூட்டர் சாலைக்கு வரும்போது எப்படியாக இருக்கும் என்று தெரிந்து கொண்ட பின் இதை வாங்க வேண்டும் என காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பு என்பது துவங்கி விட்டது. விரைவில் இதன் டெலிவரி குறித்த தகவல்கள் எல்லாம் வெளியாகும். அதன் பின் இதன் விற்பனை சூடு பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 13:38 [IST]
English summary
Ather rizta production begins price check out details
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+