சென்னையில வெள்ளம் வந்தாலும் இந்த ஒரு பைக் இருந்தா போதும் ஈஸியா தப்பிச்சிடலாம்!

ஏத்தர் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தனது இரண்டாவது வகை ஸ்கூட்டரான ரிஸ்டா என்ற குடும்பத்துடன் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப் போகிறது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கான டெஸ்டிங் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படியாக 400மிமீ உயரம் கொண்ட தண்ணீரில் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் வகையில் டெஸ்ட் செய்யப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நல்ல பெர்ஃபார்மென்ஸை விரும்புவர்கள் இந்த ஏத்தர் 450 ரக எலெக்ட்ரிக் ஸ்கூடர்களை வாங்கலாம்.

ather rizta

இந்நிலையில் குடும்பத்துடன் பயணிக்கும் ஸ்கூட்டர்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக ஏத்தர் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தனது புதிய ரிஸ்டா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. தற்போது இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. ஒரே ஸ்கூட்டர் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு செக்மெண்டிற்க்கும் தனி ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.

இப்படியாக ரிஸ்டா ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ள நிலையில் இந்த ஸ்கூட்டருக்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதன் பேட்டரியை சோதனை செய்யும் வீடியோ வெளியானது. தற்போது இந்த ஸ்கூட்டரை தண்ணீரில் இயக்கி சோதனை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

ather rizta

இந்த வீடியோவில் சுமார் 400 மிமீ உயரம் கொண்ட ஒரு ஓடை போன்ற வடிவமைப்பில் தண்ணீரை நிரப்பி அதற்குள் ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா ஸ்கூட்டரை ஒருவர் ஓட்டி செல்கிறார். ஸ்கூட்டர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தடையின்றி அந்த இடத்தை கடந்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த சோதனையின் மூலம் ஏத்தர் நிறுவனம் தனது வாகனம் பேட்டரி மற்றும் மோட்டாருகான ஐபி 67 என்ற வாட்டர் ப்ரூஃப் தரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்த தரத்தை நிறுவனம் சோதனை செய்து பார்த்துள்ளது. வெற்றிகரமாக இந்த ஸ்கூட்டர் 400 மீமி உயரம் கொண்ட தண்ணீரை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனால் இந்த ஸ்கூட்டரை வாங்குபவர்கள் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் தாராளமாக இந்த ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல முடியும். பலருக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தண்ணீருக்குள் இறக்கி விட்டால் அதன் ஆயுள் குறைந்து விடும் பேட்டரி பாதிக்கப்படும் என நினைத்து வருகிறார்கள். இதற்காக இந்த சோதனையை செய்து ஏத்தர் நிறுவனம் அவர்களுக்கு ஐபி 67 தரச் சான்றை நிரூபனம் செய்துள்ளது.

இது மட்டுமல்ல ஏத்தர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பைக்கின் முன்புறம் உள்ள டிஸ்ப்ளே ஸ்கிரீன் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோவில் இந்த ஸ்கிரீன் பிளர் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாம் பார்க்கும்போது இது 7 இன்ச் கொண்ட டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டிஸ்ப்ளே தான் 450எக்ஸ் என்ற ஸ்கூட்டரிலும் இருக்கிறது.

இந்த ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அதே செட்டப் தான் இதிலும் இருக்கிறது. இதன் வெளி வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மற்றும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் போது இதன் விலை மற்றும் மற்ற அனைத்து விபரங்களும் தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குடும்பத்துடன் பயணிக்கும் ஸ்கூட்டர்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த ரிஸ்டா என்ற ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 14:09 [IST]
English summary
Ather rizta water wading test details
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X