100 கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட இந்தியாவிற்காக 100 யூனிட்டை மட்டுமே தயார் செய்த ஹீரோ.. ஏலமே தொடங்கிருச்சா!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிரபலமான பைக் மாடல்களில் கரிஷ்மா (Karizma XMR)-வும் ஒன்றாகும். இந்த பைக் மாடலிலேயே ஸ்பெஷல் வெர்ஷனை ஹீரோ நிறுவனம் தற்போது விற்பனைக்கு தயார் செய்து இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பானது நிறுவனத்தை நிறுவிய பிரிஜ்மோகன் லால் முஞ்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹீரோ நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் 'சிஇ001' (CE001) எனும் பெயரில் அழைக்கப்படும் என கூறப்படுகின்றது. இதன் வாயிலாக கரிஷ்மாவை அடிப்படையாகக் கொண்ட இந்த பைக் கரிஷ்மா எனும் பெயரில் விற்பனைக்கு வராது என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதேநேரத்தில், ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை சென்டென்னியல் கலெக்டர்ஸ் எடிசன் மோட்டார்சைக்கிள் (Centennial Collector's Edition Motorcycle) என குறிப்பிட்டு இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பை அது வெறும் 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்கு தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வெறும் நூறு பேரால் மட்டுமே இந்த பைக்கை வாங்க முடியும்.

Auction begins for exclusive karizma ce001

ஏலத்தின் வாயிலாகவே இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய இருக்கின்றது. இந்த ஏல பணிகளே தற்போது தொடங்கி இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் அதன் எக்ஸ் பதிவின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றது. ஆனால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இதற்கான எந்த லிங்க்-கும் இடம் பெறவில்லை.

இந்த நிலையிலேயே இந்த பைக்கை புக் செய்வது என நிறுவனத்தின் எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பினர். இந்த கமெண்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் அதே எக்ஸ் தளத்தில் இந்த பைக்கை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக ஏலம் விடப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

மேலும், அதிக விபரங்களுக்கு தங்களின் சமூக வலைதள பக்கங்களுடன் இணைந்திருக்கவும் அது அறிவுறுத்தியிருக்கின்றது. நிறுவனத்தின் பதிலின் வாயிலாக ஹீரோ மோட்டோகார்ப் தன்னுடைய இந்த சிறப்பு பதிப்பு பைக்கை பிரத்யேகமாக சிறப்பு நிகழ்ச்சியின் வாயிலாகவே ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

கரிஷ்மாவை தழுவி இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருந்தாலும், அதைக் காட்டிலும் மிகுந்த கவர்ச்சியான தயாரிப்பாக இந்த சிறப்பு பதிப்புக் காட்சியளிக்கின்றது. மேலும், பல தனித்துவமான அம்சங்களையும், பிரத்யேக நிற அலங்கரிப்பையும் இந்த பைக் கொண்டிருக்கின்றது. இதனால், கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் மாடலைக் காட்டிலும் மிகவும் காஸ்ட்லியான பைக் மாடலாக இது இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

இந்த பைக்கின் சிறப்புகள் பற்றிய விபரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஹீரோ வெளியிடவில்லை. விரைவிலேயே அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த பைக்கின் வாயிலாக கார்பன் ஃபைபர் பேனல் மற்றும் அக்ரபோவிக் எக்சாஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அலங்கரிப்பு மற்றும் சிறப்பம்சங்களில் இந்த பைக் வழக்கமான கரிஷ்மா-விடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளித்தாலும், எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதகாவே காட்சியளிக்கின்றன. வழக்கமான கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே 25 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 210 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சினே இதிலும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இதன் எடை மிக பெரிய அளவில் குறைந்துக் காணப்படும். எனவே, பைக்கின் திறன் வெளிப்பாட வழக்கமான கரிஷ்மாவைவிட இதில் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலை எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விட ஹீரோ திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களும் வெளியாகவில்லை. இதுபற்றிய விபரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தகவல்கள்: தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஹீரோ நிறுவன நிறுவனர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த பைக் அதன் ஊழியர்கள், கூட்டாளிகள், வணிக பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரர்களுக்காக மட்டுமே தயார் செய்யப்பட்ட பைக் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இவர்களால் மட்டுமே இந்த பைக்கை ஏலத்தில் கலந்துக் கொண்டு வாங்க முடியும். தனி நபர்களால் இந்த பைக்கை வாங்க முடியாது என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு பைக் விற்பனையின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்கள் சமூகத்தினரின் சிறந்த நன்மைக்காகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏலத்தில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு யூனிட்டும் ஒவ்வொரு விதமான விலையில் விற்பனைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், அவை சாலையில் முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் தென்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 100 யூனிட்டுகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு இருப்பதால் இதை வாங்க மிகப் பெரிய அளவில் போட்டி நிலவும் என்றும் யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2024, 12:15 [IST]
English summary
Auction begins for exclusive karizma bike 100
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+